பக்கம் எண் :

750கலித்தொகை

எ - து: நம்மைப் பிரிந்து உள்ளில்லாத உள்ளத்தாலே நம்மை நினையாமல் அமைந்திருந்தோரை உள்ளே உள்ளே உவந்து உள்ளும் நம்முடைய நெஞ்சமும் இம் 1மாலையையும் ஊரார் கூறும் அலரையும் பொறாதே நம்மை விட்டுப் போகாநின்றது; இனி என்செய்வேமென வருந்திக் கூறினாள். எ - று.

இதனால், தலைவிக்கு இழிவு பிறந்தது.

இது ‘’நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி’’ (1)என்ற இலக்கணஞ் சிதைய இடையிடை சொற்சீரடி வருதலின் ஒத்தாழிசையாகாது எண்ணிடை யிட்டுச் சின்னங்குன்றிய (2) கொச்சகமாயிற்று.

இது முதலிய மூன்றுபாட்டும் (3) மாலைக்காலத்தைக்கூறினமையின் ‘’காருமாலையுமுல்லை’’ என்னும் (4) பொதுவிதிபற்றி முல்லையுட் கோத்தல்வேண்டுமெனின், அது பெரும்பான்மைபற்றிக்கூறியது; மாலை ஏற்பாட்டின் பின் நிகழுங் காலமாதலின் அதற்கியைபுபட்டு நெய்தற்கும் உரித்தாயிற்று. அது


1. தொல். செய். சூ. 135.

2. (அ) இச்செய்யுளை ‘தாழிசைதோறும் தனிச்சொற்பெற்றுவந்த நேரிசை யொத்தாழிசைக்கலிப்பா’ என்றுகூறி, வெல்புகழ்...............................மருண் மாலை’’ இது தரவு ‘’மாலைநீ, தூவறத்...................................காரிகை கடிகல்லாய்’’ ‘’மாலைநீ, தையெனக்..........................புதுநலங் கடிகல்லாய்’’ ‘’மாலைநீ, தகைமிக்க...................... முறுவலுங்கடிகல்லாய்’’ இவை மூன்றுந்தாழிசை. ஆங்க-தனிச்சொல் ‘’மாலையு...........................ளுவந்தே’’ இது சுரிதகம் என்று விளக்கினர் இளம்; (தொல். செய். சூ. 131. ‘போக்கியல்’) பேராசிரியர்க்கும் நச்சினார்க்கினியர்க்கும் இது உடம்பாடன்றென்பது. (ஆ) பேராசிரியர் இச்செய்யுள் தரவுந் தாழிசையும் போக்கும் முறையானே வந்த தாயினும் ‘இடைநிலைக்கிளவி தாழிசைப்பின்னர், நடைநவின்றொழுகு மாங்கென் கிளவி’ (தொல். செய். சூ. 135.) என்னும் இலக்கணஞ்சிதைய [ாத் தரவிறுதியினுந்] தாழிசை [யிறுதி]கடோறுஞ் சொற்சீர்பல வருதலான் ஒத்தாழிசையெனப்படாது அதன்வகைத்தாய் எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியதூஉ(கொச்சக) மாயிற் றென்பதாலும் நச்சி னார்க்கினியர் அதனையே தழுவி, ‘’இது ‘நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி’ என்னும் இலக்கணஞ் சிதைய இடையிடைசொற்சீரடி பலவருதலின் ஒத்தாழிசையாகாது எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றிய கொச்சகமாயிற்று’’ என்று எழுதுவதாலும் விளங்கும். தொல். செய். சூ. 155.

3. ‘’கலியுள், மாலைக்காலம் நெய்தலின்கண் வந்தது’’; தொல். அகத். சூ. 8. நச்.

4. தொல். அகத். சூ. 9.

(பிரதிபேதம்)1மாலையுமிவ்வூரார் கூறும்