பக்கம் எண் :

752கலித்தொகை

முறுவல் 1கொள் பவைபோல முகையவிழ்பு புதனந்தச்
சிறு (1) வெதிர்ங் குழல்போலச் சுரும்பிமிர்ந் (2) திம்மெனப்
(3) பறவைதம் பார்ப்புள்ளக் (4) கறவைதம் பதிவயிற்
10 கன்றமர் விருப்பொடு மன்றுநிறை புகுதர
மாவதி சேரமாலை வாள்கொளா
(5) வந்தி யந்தண ரெதிர்கொள வயர்ந்து
செந்தீச் செவ்வழ 2றொடங்க வந்ததை
(9) வாலிழை மகளி 3ருயிர்பொதி யவிழ்க்குங்

1. ‘’ஆரும் வெதிரும்....................மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும்’’ (தொல். புள்ளிமயங். சூ. 68.) என்பதனால். வெதிர்ங் குழலென வந்தது.

2. ‘’இம்மென’’ கலி. 36 : 5; 123 : 3.

3. பார்ப்பென்பது பறவையின் இளமைப் பெயராய் வருதற்கு, ‘’பறவை தம்பார்ப்புள்ள’’ என்பது மேற்கோள்: தொல். மரபி. சூ. 4. ‘பார்ப்பும்’ இளம். இச்சொல் பார்வலெனவும் வழங்கும்.

4. (அ) ‘’ஆன் கணங், கன்றுபயிர் குரல மன்று நிறைபுகுதர’’ குறிஞ்சி. 217 - 218. (ஆ) ‘’மதவுநடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக், கன்றுபயிர் குரல் மன்றுநிறை புகுதரு, மாலையும்’’ அகம். 14 : 9 - 12. (இ) ‘’சேதா, முலைபொழி தீம்பாலெழுதுகளவிப்பக், கன்று நினைகுரலமன்று வழிப்படர’’ மணி. 5 : 130 - 132. (ஈ) ‘’கறவை கன்று வயிற்படர’’ குறுந். 108.

5. (அ) ‘’அந்தியந்தண ரயர’’ குறிஞ்சி. 225. (ஆ) ‘’அந்தி யந்தணர் செந்தீப்பேண்’’ மணி. 5 : 133. (இ) ‘’கருதி யந்தணர் யாவருந் தங்கடன் கழிப்பச், சுருதியென்னும் வெஞ் சாபமே லம்புகை தொடுத்துப், பருதி தன்பெரும் பகைவர்மேல் விடுத்தலிற் பரந்த, குருதி யாமென நிவந்தெழச் சிவந்தது குடபால்’’ வில்லி. கிருட்டினன்றூது. 86. (ஈ) ‘’(மறையவன்) வாம்பரித் தடந்தேர்ப் பரிதிவா னவன்போய் மறிதிரைக் குடகடல் குளிப்ப, வாம்பல்வா யவிழு மாலையங் காலத் தந்திவந்தனைத்தொழின் முடித்துத், தீம்புனற் றுறைநின் றகன்று’’ பிரமோத்தர. உமாமகேசுவரபூசை. 7.

6. ‘’மாலையோவல்லை’’ என்னுங் குறளின் விசேடவுரையில் ‘’வாலிழை மகளிருயிர்பொதி யவிழ்க்குங், காலை’’ என்றாற்போல ஈண்டுப் பொது மையாற் கூறப்பட்ட தென்பர் பரி; குறள். 1221.

(பிரதிபேதம்)1கொள்பவர்போல, 2றுடங்க, 3உயிர்ப்பொதி.