பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்753

15 காலை யாவ தறியார்
(1)மாலை (2) யென்மனார் மயங்கி யோரே.

இது பிரிவிடை மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி தோழிக்கு உரைத்தது.


1. மன் அசைநிலைக்கண் வந்ததற்கு, ‘’மாலை யென்மனார் மயங்கியோரே’’ என்பது மேற்கோள்; நன். இடை. சூ. 13. மயிலை. இவ்வடியே குறுந். 234ஆம் செய்யுளிலும் மூன்றாம் அடியாக வந்துள்ளது.

2. (அ) என்மனா ரென்பது, இடைச்சொல் தான்சாரப்படுஞ் சொல்லிற்கு வேறாய் வருதலே யன்றி அதற்கு உறுப்பாயும் வருமென்பதற்கு மேற்கோள்; தொல். இடை, சூ. க. சே. (ஆ) "என்மனா ரென்பது செய்யுண் முடிபெய்தி நின்றதோ ராரீற்று எதிர்கால முற்றுச்சொல்,.........................................என்ப என்னு முற்றுச் சொல்லினது பகரங் குறைத்து மன்னும் ஆருமென இரண் டிடைச்சொற்பெய்து விரித்தாரென்று உரையாசிரியர் கூறினாராலெனின்;- என்மனாரென்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வாராது, நூலுள்ளும் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலானும், இசை நிறையென்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார் பின்னும் இசை நிறையென்றல்மேற்கோண்மலைவாதலானும் அவர்க்கு அதுகருத்தன் றென்க. மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணரவைத்தல் அவர்க்கு இயல்பாகலாற் செய்யுண்முடி பென்பது கூறாராயினார்" (தொல். கிளவி. சூ. 1.) என்றும் (இ) இதனை வினைத்திரிசொல் லென்பாருமுள ரென்றும். (தொல். எச்ச. சூ. 1.) கூறுவர் சேனாவரையர்; (ஈ) "என்பவென்னு முற்றுச்சொல் ‘குறைக்கும்வழிக் குறைத்தலும், என்பதனாற் பகரங்குறைத்து, ‘விரிக்கும்வழி விரித்தல்’ என்பதனால் ‘மன்’ ‘ஆர்’ என்பன இரண்டிடைச்சொற் பெய்து விரித்து, என்மனா ரென்றாயிற்று" என்று (இறை. சூ. 1.) இறையனா ரகப்பொரு ளுரைகாரரும் (தொல். கிளவி. சூ. 1) கல்லாடனாரும் (உ) என்பவென்னுமொழி, ஈற்றுப்பகரங்கெட்டு மன் ஆரென்னும் இடைச்சொற்களைப்பெற்று என்மனாரென முடிந்ததென்று (யா - வி. சூ. 24.) யா - வி. உரைகாரரும் உரையாசிரியரெனப் பேர்பெற்ற இளம்பூரணர் கொள்கையையே பின்பற்றுவர்; (ஊ) ‘’என்மனாரென்பது செய்யுண்முடி பாயதோ ராரீற்று முற்றுச்சொல்; மன் எதிர்காலவிடைநிலை. அது ‘உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே’ என்னுஞ் சூத்திரத்துச் சேனாவரைய ருரையானுமறிக’’ என்று கூறுவர் சிவஞானமுனிவர்; சிவஞானபோத மாபாடியம். சூ. 1. உரை.