இதன் பொருள் அகன்ற (1) உலகத்தை எவ்வுயிர்க்குந் தோற்றுவிக்கும் தன்னுடைய பல கிரணங்களைத் தனக்கு வாயாகக்கொண்டு (2) கான்ற பகற்காலத்தை மீண்டும் அவ்வாயாலே விழுங்கினாற்போல அவற்றைச் சுருக்கிக்கொண்டு படுகின்ற சுடர் அத்தகிரியைச் சேர்கையினாலே போரின்கண் மிகுகின்றசக்கரப்படையை யுடைய மாயோனிறம்போல இயல்பாகவுள்ள இருள் பரந்துவாராநிற்க, அதனைப் பொறாதே தன் நிலவாலே ஒட்டிப் புறங்காண்பாரைப்போலே அழகினையுடைய மதி தோன்ற, கணவரைக் கூடித் துயிலைப்பெற்ற கண்கள் போலே திரண்ட தண்டுகளையுடையவாகிய தாமரை (3) முதலியன குவிய, தம்புகழ்களைக் கேட்ட சான்றோரைப்போலே தலையைச் சாய்த்து மரங்கள் துயில, சிறுதூறுகள் பிரிந்த மகளிரை (4) இகழ்ந்து சிரிப்பவைபோலே முகைகள் அவிழ்ந்து விளங்க, சிறிய மூங்கிலாகிய குழல்போலச் சுரும்புகள் ஆர்ப் பரவஞ்செய்து பாட, புட்கள் தம் பார்ப்புக்களை நினைத்துக் குடம்பையைச் சேரப், பசுக்கள் தாந் தங்கும் ஊர்களிடத்திற் கன்றின்மேல் அமர்ந்த விருப்பத் தோடே மன்றுக ணிறையப் புகுதலைச்செய்ய, மாக்கள் தாந் தங்குமிடத்தே சென்று தங்க, அந்தணர் தாஞ் செய்யுந் தொழில்களைச் செய்து அந்திக் காலத்தை எதிர்கொள்ள, (5) மகளிர் செந்தீயால் உண்டான விளக்கை ஏற்றத் தொடங்க, மாலை விளக்கங்கொள்ள வந்ததனை அறிவுகெட்டோர் வாலிய இழையினையுடைய மகளிருயிரை அதனைப் பொதிந்துநின்ற உடலினின்றும்
1. ‘’இருவிழிகள் வாண்முகத்தி லிருந்தாலும் வானிரவி யெழுந்தாலன்றிக், கருதுநிலப்பல்பொாருளுங் காண்டலரிதாம்’’ திருக்குற்றாலப். நூற்பயன். 1. 2. (அ) "வெயில்கான் றிருள்சீத் தெழுவெங்கதிர்ச் செல்வன் மைந்தன்" கூர்ம. இராவணவதை. 17. (ஆ) "பாயிருள் பருகுபு பகலைக்கான் றெழுங், காயெரிக் கதிரவன்" திருவானைக்கா. தீர்த்தவிசேடப் 69. 3. முதலியனவென்றது, குவளை நெய்தல்களை; இவை காலை மலர்ந்து மாலைக் குவிவனவென்றே பண்டைநூல்கள் கூறுகின்றன; இதற்கு மாறாக, குவளை மாலை மலர்ந்து காலைக் குவியுமென்று பிற்காலத்து நூல்கள் கூறுகின்றன. இவற்றின் உண்மை நோக்கி அறியத்தக்கது. 4. "முல்லைத், தொகுமுகை யிலங்கெயி றாக, நகுமே தோழி" குறுந். 126. 5. (அ) "வளமனைப், பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி, யந்தி யந்தண ரயர" குறிஞ்சி. 223 - 225. (ஆ) "உள்ளினே னல்லனோ யானே யுள்ளிய, வினைமுடித் தன்ன வினியோண், மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே" நற். 3 : 7 - 9. (இ) "எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப, மல்லன் மூதூர் மாலைவந் திறுத்தென" சிலப். 4 : 16 - 20.
|