பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்755

போக்குங் காலத்தினது இயல்பாவதறியாராய் மாலைக்காலமென்று அதுவும் ஒருகாலமாகக் கூறாநிற்பரென ஆற்றாளாய்த் தோழிக்குக் கூறினாள். எ - று.

கல்சேர்கையினாலே 1இருள் இவராநிற்க 2அதுபொறாது மதிதோன்ற என ஒருவினையாகமுடிக்க. "பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் 3பருதி" (1) என்றார் பிறரும்.

4மதியேர்தர என்பது முதலிய செயவெனெச்சங்களெல்லாம் நிகழ்கால முணர்த்திநின்று 5மாலைவாள்கொள[ா] என்னுஞ்செய[யா] வெனெச்சத்தோடு முடிந்தன. அது பின் வந்ததை என்னுந் தொழிற்பெயர்த்திரிசொல்லோடு முடிந்தது.
மயங்கியோர் என்றது தோழியைக்கருதி. 6"திணைமயங்குறுதலும்" (2) என்றதனாற் கருப்பொருண்மயங்குதலும் அமைத்தாம்.

இனி மாலை 7வாழ்கொளவென்று பாடமாயின் அப்பாடத்திற்கு, மாலை தான் வாழ்தல்கொள்ள வந்ததனை என்க.

8அளறுடங்க என்பதும் பாடம்.

இதனால், தலைவிக்கு இழிவுபிறந்தது.

இஃது அடக்கியலின்றி அடிநிமிர்ந்தோடிய கொச்சகவொருபோகின் பகுதியாய்த் தனிச்சொல்லும் அடக்கியலுமின்றிச் சுரிதகம் பெற்று அடி நிமிர்ந்தோடிய 9அகநிலைக்கொச்சகம். (2)

(120). அருடீர்ந்த காட்சியா னறனோக்கா னயஞ்செய்யான்
வெருவுற வுய்த்தவ னெஞ்சம்போற் பைபய
விருடூர்பு புலம்பூரக் கனைசுடர் கல்சேர
வுரவுத்தகை மழுங்கித்தன் னிடும்பையா லொருவனை
5யிரப்பவனெஞ்சம்போற் புல்லென்று புறமாறிக்
கரப்பவ னெஞ்சம்போன் மரமெல்லா மிலைகூம்பத்
தோற்றஞ்சால் செக்கருட் பிறைநுதி யெயிறாக
நாற்றிசையு நடுக்குறூஉ மடங்கற் காலைக்
கூற்றுநக் கதுபோலு முட்குவரு கடுமாலை;

1. பெரும்பாண். 2.

2. தொல். அகத். சூ. 12.

(பிரதிபேதம்)1இருள்வாராநிற்க, 2அது பொறாமதி, 3பரிதி, 4மதிபோதர, 5மாலை வளர்கொளா வென்னுஞ் செய்யாவென்னு மெச்சத், 6திணைமயக்குறுதலும் என்பதனாற் றரும்பொருண், 7வாழ்கொளவென்ற பாடத்திற்கு மாலைதான் வாழ்தல், 8அழறுடங்க, 9வகைநிலைக்.