பக்கம் எண் :

756கலித்தொகை

10 மாலைநீ,உள்ளங்கொண்டகன்றவர் துணைதாராப்பொழுதின்கண்
வெள்ளமா னிறநோக்கிக் கணைதொடுக்குங் கொடியான்போ
லல்லற்பட் டிருந்தாரை யயர்ப்பிய வந்தாயோ;
13மாலைநீ, ஈரமில் காதல ரிகந்தருளா விடனோக்கிப்
போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போ
லாரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ;
19மாலைநீ, கந்தாதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண் 
வெந்ததோர் புண்ணின்கண் வேல்கொண்டு நுழைப்பான்போற்
காய்ந்தநோ யுழப்பாரைக் கலக்கிய வந்தாயோ;
எனவாங்கு;
20இடனின்றலைத்தரு மின்னாசெய் மாலை
துனிகொ டுயர்தீரக் காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேனின்ற கடும்பகை
யொல்லென நீக்கி யொருவாது காத்தோம்பு
நல்லிறை தோன்றக் கெட்டாங்
கில்லா கின்றா லிருளகத் தொளித்தே.

இது பிரிவிடையாற்றுத தலைவி மாலைப்பொழுதுகண்டு கழிய ஆற்றாளாயின இடத்துத் தலைவன்வரவும் அவளது அகமலர்ச்சியுங் கண்டார் கூறியது.

இதன் பொருள்.

அருடீர்ந்த காட்சியா னறனோக்கா 1னயஞ்செய்யான்
வெருவுற வுய்த்தவ னெஞ்சம்போற் பைபய
விருடூர்பு புலம்பூரக் (1) கனைசுடர் கல்சேர
வுரவுத்தகை (2) மழுங்கித்தன் னிடும்பையா லொருவனை
5யிரப்பவனெஞ்சம்போற் புல்லென்று புறமாறிக்
கரப்பவ னெஞ்சம்போன் மரமெல்லா மிலைகூம்பத்

1. (அ) "கனைசுடர் கல்சேர்பு மறைய" அகம். 47 : 9. (ஆ) "படுசுடர் கல்சேர" (இ) "ஒண்சுடர் கல்சேர"
(ஈ) "கல்சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்" கலி. 116 : 2, 121 : 1, 134 : 4.

2. மழுங்க லென்பது ‘மழுகல்’ எனவும் ‘மாழ்கல்’ எனவும் வழங்கும்.

(பிரதிபேதம்)1அறஞ்செய்யான், பயஞ்செய்யான்.