முன்னர் நின்றமாலை உட்குதலையுடைய மாலையெனப் பின்னர் வந்த 1மாலை விசேடித்துநின்றது. 10 மாலைநீ, உள்ளங்கொண்டகன்றவர் துணைதாராப்பொழுதின்கண் வெள்ளமா (1) னிறநோக்கிக் கணைதொடுக்குங் கொடியான்போ லல்லற்பட் டிருந்தாரை யயர்ப்பிய வந்தாயோ எ - து: இங்ஙனம் கடிய நீ என்னெஞ்சத்தைத் தம்மிடத்தே கொண்டு நீங்கினவர் எனக்குத் துணையாந்தன்மையைத் தாராத காலத்திலே வெள்ளத் திலே அகப்பட்டுக் கரையேற மாட்டாத மானினது மருமத்தைப் பார்த்து அம்பைத் தொடுக்குங் கொடியவனைப்போல அல்லலிலே அழுந்தியிருந்த என்னைக் கையறவெய்துவிக்க வந்தாயோ? எ - று. மாலை நீ என வருகின்றவற்றையும் தரவொடு கூட்டி முற் கூறியவாறே பொருளுரைக்க. 13 மாலைநீ, ஈரமில் காதல ரிகருளா (2) விடனோக்கிப் (3) போர் (4) தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போ லாரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ எ - து: இங்ஙனங் கடிய நீ அருளில்லாத காதலர் விட்டுநீங்கி அருளாதிருந்த காலத்தைப் பார்த்துப் (5) போரிலே தோற்றிருந்தவர்களை அவர்கள் பட்ட தோல்வியை இகழ்ந்து சிரிப்பாரைப்போலே பொறுத்தற்கரிய வருத்த முற்ற என்னை வருத்துவிக்கவந்தாயோ? எ - று.
ரமர்க்களத் தறிய, நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்’’ சிலப் : 26 : 215 - 218. 1. (அ) "சிலைமாண் கடுவிசை கலைநிறத் தழுத்தி" (ஆ) "வரிமர னோன் ஞாண் வன்சிலைக் கொளீஇ, யருநிறத் தழுத்திய வம்பினர் பலருட, னண்ணல் யானை வெண்கோடு, கொண்டு" (இ) "வெள்வே, லாதனெழினி யருநிறத் தழுத்திய, பெருங்களிற் றெவ்வம் போல" என்பவையும் இந்நூற்பக்கம் 314 : 1ஆம் குறிப்பும் பார்க்க. 2. இடன் - காலம். கலி. 121 : 23. 3. "போர்...............................வந்தாயோ" என்பது செய்கை யல்லாத மாலைப் பொழுதினைச் செய்யாமரபிற் றொழிற்படுத்தடக்கி உவமவாயிற்படுத்த தென்பர், நச்; தொல். பொருளி. சூ. 2. 4. "ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும், புதுவ தன்று" புறம். 76 : 1 - 2. 5. (அ) "தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே" புறம். 284 : 8; (ஆ) "வானக மண்ணு மெல்லா நகுநெடு வயிரத் தோளா, னானகும் (பிரதிபேதம்)1மாலையை விசேடித்து.
|