பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்759

போர்தொலைந்திருந்தார், தொழிலின்றொழில் தொழிலுடையதன்மேல் நின்றது.

19 (1) மாலைநீ, கந்தாதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண்
(2) வெந்ததோர் புண்ணின்கண் வேல்கொண்டு நுழைப்பான்
காய்ந்தநோ யுழப்பாரைக் கலக்கிய வந்தாயோ [போற்

எ - து: இங்ஙனங் 1கடிய நீ எனக்குப் பற்றுக்கோடாதலை அமைந்தவர் என் வருத்தத்தைப் போக்குதலைச்செய்யாத காலத்தே முன்பேவெந்ததொரு புண்ணிலே பின்பு ஒரு வேலைக்கொண்டு சொருகுவாரைப்போலே மெய் வெதும்புதற்குக் காரணமான காமநோயிலே அழுந்துகின்ற என்னையுள்ளி உள்ள அறிவையுங் கலங்குவிக்க வந்தாயோ? எ - று.

2எனவாங்கு

எ - து: என்று அவள் கூறும்படியாக. எ - று.

ஆங்கு, அசை.

20 இடனின் றலைத்தரு மின்னாசெய் மாலை

துனிகொ டுயர்தீரக் காதலர் துனைத்ர

(3) மெல்லியான் பருவத்து மேனின்ற கடும்பகை

யொல்லென நீக்கி யொருவாது 3காத்தோம்பு

நல்லிறை தோன்றக் கெட்டாங்

கில்லா கின்றா லிருளகத் தொளித்தே


பகைவ ரெல்லா நகுவரென் றதற்கு நாணான்” கம்ப. கும்ப. 11. (இ) “முன்னை வைகலின் முரிந்தன னென்றே, பன்னு மோர்வசை பரந்ததுமன்றிப், பின்னு மிப்பகல் பிழைத்தன னென்றா, லென்னை யாவர்களு மெள்ளுவர் மாதோ” கந்த. மூன்றாநாட்பானு. 148.

1. பொழுதொடு கேட்குநபோலக் கூறியதற்கு, “(மாலைநீ........................) காய்ந்த நோயுழப்பாரைக் கலக்கிய வந்தாயோ [.........................மாலை]” என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 200. நச்.

2. (அ) "மாலை, வெந்துயர்க் கண்ணின் வேலிட்டதுபோல், வந்திறுத்தன்றால் வலியெனக் கில்லென" (பெருங். (1) 33 : 94 - 96.) என்பதும் (ஆ) "வெந்தபுண் வேலெறிந் தற்றால்” (கலி. 83 : 30) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

3. "நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி, னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா, மெல்லியான் பருவம்போன் மயங்கிரு டலைவர, வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருன்மாலை” கலி. 129 : 4 - 7.

(பிரதிபேதம்)1கூடியநீ, 2எனவாங்கென்றதில் ஆங்கசை, 3காத்தாற்று நல்லிறை.