| கமழ்தண்டா துதிர்ந்துக வூழுற்ற கோடல்வீ யிதழ்சோருங் குலைபோல விறைநீவு வளையாட்கு; | 15 | இன்றுணை நீநீப்ப விரவினுட் டுணையாகித் தன்றுணைப் பிரிந்தயாஅந் தனிக்குரு குசவுமே யொண்சுடர் ஞாயிற்று விளக்கத்தா னொளிசாம்பு நண்பகன் மதியம்போ னலஞ்சாய்ந்த வணியாட்கு; | | எனவாங்கு; | 20 | எறிதிரை தந்திட விழிந்தமீ னின்றுறை மறிதிரை வருந்தாமற் கொண்டாங்கு நெறிதாழ்ந்து சாயினள் வருந்தியா ளிடும்பை பாய்பரிக் கடுந்திண்டேர் களையினோ விடனே. |
இது தலைவன் ஒருவழித் தணந்தவிடத்துத் தலைவி ஆற்றுமைகூறி வரையக் கருதினாயாயின் இஃதிடமெனச்சொல்லியது. இதன் பொருள். | ஒண் (1) சுடர் கல்சேர வுலகூருந் தகையது தெண் (2) கட லழுவத்துத் திரை 1நீக்கா வெழுதரூஉந் தண்கதிர் மதியத் தணிநிலா 2நிறைத்தரப் புள்ளின மிரைமாந்திப் புகல்சேர வொலியான்று (3) வள்ளிதழ் கூம்பிய (4) மணிமரு ளிருங்கழி பள்ளி3புக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப |
எ - து: ஒள்ளிய ஞாயிறு அத்தகரியைச் சேர்தலானும் உலகெல்லாந்தன் ஒளிபரக்குந் 4தன்மையதாகித் தெளிந்த கடற்பரப்பிற் றிரையைநீக்கித் தோன்றுந் தண்ணியதாகிய கதிரையுடைய மதியத்தினது
1. இந்நூற்பக்கம் 156 : 1 - ஆம் குறிப்புப் பார்க்க. 2. (அ) "கடலழுவ நீந்தி” சீவக. 506. (ஆ) "கருங்கட லழுவத்து” பெருங். (1) 45 : 88. 3. பிறிது பொருளோடு உவமை கூறாது பொருள்தோற்றிய விடத்தோடு நோக்கி முன்னமரபால் உவமை கூறியதற்கு, “வள்ளிதழ் ........ தண்சேர்ப்ப” என்பது மேற்கோள்; தொல். உவமை. சூ. 23. ‘பிறிதொடு’ இளம். 4. “இனமீ னிருங்கழி யோத முலாவ, மணிநீர் பரக்குந் துறைவ” திணைமொழி. 44. (பிரதிபேதம்) 1நீங்காவெழுதரூந், 2நிறுத்தர, நிவத்தர, 3புக்கபோலும், 4தகைமையதாகி.
|