அழகையுடைய நிலாமிகுதலைச்செய்கையினாலும் (1) பறவைகள்இரையை நிறையத்தின்று தாந்தங்கும் (2) புகல்களைச் சேர்கையினாலே தன்னிடத்து ஆரவாரம் அடங்கப்பட்டு வளவிய இதழ்களுங் குவிந்த நீலமணியென்று மருளும் பெரியகழி துயில் கொண்ட தன்மையை யொக்குங் கடலையுடைய குளிர்ந்த சேர்ப்பனே! எ - று. தகையதாகி எழுதரும் மதி. ஞாயிறு படுதலும் மதியந் தோன்றுதலும் பறவைகள் புகல்சேர்தற்குக் காரணமென்றுகொள்க. அவை சேர்கையினாலே ஒலியவிந்து 1போயதைப் பள்ளிபுக்காற் போலே இருந்ததென்றது தன்குறிப்பை அதன்மேலேற்றிக்கூறியதோர் உவமவிசேடம். இஃது “ஒரீ இக்கூறலுமரீ இயபண்பே” என்னும் (3) உவம 2வியற்சூத்திரத்தில் அடக்கினாம். இதழ் கூம்புதலும் துயிற்கு அடையாய் நின்றது. ஞாயிறு கல்சேர்ந்ததனைத் தலைவன் இட்டுப்பிரிந்து தன் மனையிலே சேர்ந்திருத்தலிற் களவு புலப்படாத தன்மையாகவும் மதியத்தின் நிலாப் பரந்ததனை அவ்விடத்துக் காவலின் விளக்கமாகவும் பறவைகளின் ஆரவாரங்கெட்டதனை இவ்விரண்டினாலும் அலர்தூற்றுகின்ற மகளிரொலி அவிந்து இவ்வூர் துயில்கின்றாற்போலிருந்த தன்மையாகவும்உள்ளுறை யுவமங்கூறுக. 7 | தாங்கருங் காமத்தைத் தணந்துநீ புறமாறத் தூங்குநீ ரிமிழ்திரை துணையாகி யொலிக்குமே (4) யுறையொடு வைகிய போதுபோ லொய்யென (5) நிறையானா திழிதரூஉ (6) நீர்நீந்து கண்ணாட்கு |
எ - து: நீ இட்டுவைத்துப் பிரிந்து நின்னூரிடத்தே உறைந்து முன்பு நின்னெஞ்சில் தாங்குதற்கரிதாய்ப் போந்த காமத்தை நின்னிடத்தினின்றுங் கைவிடுகையினாலே துளியோடே தங்கின பூப்போலே நிறுக்குமளவில் அமையாதே விரைய விழும் நீரிலேகிடந்து நீந்துகின்ற கண்ணையுடையவட்கு
1. “பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே” சிலப். 7 : 42. 2. புகலென்றது, புகுமிடமாகிய மரப்பொந்து கூடு முதலியவற்றை. 3. தொல். உவம. சூ. 33. 4. “நீலங் காரெதிர் பவைபோ, லினைநோக் குண்கண் ணீர்நில் லாவே” (கலி. 7 : 11 - 12) என்பதும் அதன் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன. 5. “நிறைநிலா நோய்கூர நெடுங்கணீ ருகுத்தனவே” சிலப். 7 : 42. 6. (அ) “உள்ளம்போன்றுள்வழிச் செல்கற்பின்வெள்ளநீர், நீந்தலமன்னோவென் கண்” குறள். 1170.(ஆ) “நெடும்பெருங்க ணீந்தின நீர்” பு - வெ. பெருந்திணைப்.பெண்பாற். 8. (பிரதிபேதம்) 1பொய்கைபள்ளி, 2இயலிலடக்கினாம்.
|