பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்763

அசைகின்ற கடலிலே எழுந்து முழங்குகின்ற திரைதான் துணையாகி நின்று ஆரவாரியாநிற்கும். எ - று.

(1) 1வருந்துகின்ற திரை தான் துணையாக 2ஒலிக்குமென்று அஃது (2) இறந்துபடுத்தாது நின்றமைபற்றிக் கூறினாள்.

11

(3) வாராய்நீ புறமாற வருந்திய மேனியாட்
காரிருட் டுணையாகி யசைவளி யலைக்குமே
கமழ்தண்டா துதிர்ந்துக (4) வூழுற்ற கோடல்வீ
யிதழ் 3சோருங் குலைபோல விறைநீவு வளையாட்கு

எ - து: நீ ஈண்டு வாராயாய் நின்மனையிடத்தே இருந்து வருந்திய மேனியையுடையவட்கு நீ வைத்த வேட்கை நின்னிடத்தினின்றுங் கைவிடு கையினாலே கமழ்கின்ற தண்ணியதாது உதிர்ந்து சிந்தும்படி முறைமையுற்ற இதழ்கள்வீழுங் குலையினையுடைய கோடல்வீபோல இறையினின்றுங் கழலும் வளையினையுடையாட்கு நிறைந்த இராக்காலத்தே அசைந்து வருகின்ற காற்றுத்தான் துணையாகிநின்று வருத்தாநிற்கும். எ - று.

இனி மேனியாட்கு வருந்திய நீ வாராயாய்ப்புறமாற என்றுமாம்.

15

இன்றுணை நீநீப்ப விரவினுட் டுணையாகித்
தன்றுணைப் 4பிரிந்தயாஅந் தனிக்(5)குரு குசவுமே


1. “கத்துங் கடலும்............பெரும்பகை யாய்விட்ட வாமொரு பைந்தொடிக்கே” என்பது இங்கே கருதற்பாலது.

2. இறந்து படுத்தல் - இறந்துபடச் செய்தல்.

3. வேற்றுமையடுக்கினுள் ஒருருபு ஒருபொருண்மேற் பலவடுக்கிவந்து ஒரு வினையான் முடிதற்கு, “வாராய்நீ.........வளையாட்கு” என்னும் பகுதியை மேற்கோள்காட்டி, ‘இதனுள் நான்காவது அடுக்கிவந்து அலைக்குமென்பதனோடு முடிந்தவாறு கண்டுகொள்க’ என்பர், தெய்; தொல். வேற்றுமைமயங்கி. சூ. 18. ‘உருபுதொடர்ந்து’

4. “அலங்கிதழ்க் கோடல் வீயுகுபவைபோ, லிலங்கே ரெல்வளை யிறையூ ரும்மே” (கலி. 7 : 15 - 16) என்பதும் அதன் குறிப்பும் இந்நூற்பக்கம் 619 : 6-ஆம் குறிப்பும் பார்க்க.

5. குருகு: நெய்தனிலத்துக்குரித்தாகக் கூறப்படும் ஒருபறவை; கரிய காலையும் வெண்ணிறத்தையும் உடையது; பனைமடலிற் கூடுகட்டிக் கொண்டு வதிவது; மீன் யாமை முதலிய நீர்வாழுயிர்களையுண்டு உயிர் வாழ்வீது; துணைபிரிந்திருப்பின் வருந்தி அதனை அழைக்கும் இயல்பினது; நள்ளிரவில் உயவுவது; இதற்குச் சங்கும் இதன் காலுக்குத்

(பிரதிபேதம்) 1வருத்துகின்றதுதான், 2ஒலிக்குமென்றது இறந்து, 3சேரும், 4பிரிந்தயாம்.