| யொண்சுடர் 1ஞாயிற்று விளக்கத்தா னொளிசாம்பு 2நண்பகன் மதியம்போ னலஞ்சாய்ந்த வணியாட்கு |
தினையரிதாளும் வெண்டாழம்பூவுக்கும் வெண் கூதாளம்பூவுக்கும் இதுவும் உவமையாகக் கூறப்படும்; இதனிறகும் தூவியென்று அருகி வழங்கும்; இதனைக் கொக்கென்பாரும் நாரையென்பாரும் அன்ன மென்பாருமுளர்; இப்பெயர் நீர்வாழ் பறவைக்கெல்லாம் பொதுவாய் வருமாயினும் (அ) “கொக்கினங்காள் குருகினங்காள்” என வேறு வேறு விளிக்கப்படுதலின், கொக்கு அன்றென்றும் கருங்கால் கூறப்படுதலின் நாரையும் அன்னமும் அன்றென்றும் துணியலாகும். இதன் இன்குரலுக்கு யாழொலியும் இதன் கூட்டத்தின் ஆர்ப்புக்குத் தேர்மணியொலியும் உவமையாகக் கூறப்படுகின்றன. இது வெண்ணிறமுடைமையால் வெள்ளாங்குருகென்றும் வழங்கும். அதனோடு சிறுமையென்னும், அடையுமடுத்துச் சிறுவெள்ளாங் குருகென்றும் வழங்கும்; அது யானையங் குருகினும் இது சிறிதென்பது பற்றிப் போலும். (ஆ) “புன்னை, வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளு, மல்குறு கான லோங்குமண லடைகரை” (இ) “கருங்கால் வெண் குருகு” (ஈ) “பெண்ணை, வீங்குமடற் குடம்பைப் பைதல்வெண் குருகு, நள்ளென் யாமத் துயவுதோ றுருகி” (உ) “பெண்ணைத் தோடுமடலேறிக், கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, வுயிர்செலக் கடைஇப் புணர்துணைப், பயிர்த லானா பைதலங்குருகே” (ஊ) “நெய்த்தலைக் கொழுமீ னருந்த வினக்குருகு, குப்பை வெண்மண லேறி” (எ) “குருகுடைத் துண்ட வெள்ளகட் டியாமை” (ஏ) “கோடுதுணர்ந் தன்ன குருகொழுக்கு” (ஐ) “தினைத்தா ளன்ன சிறுபசுங் கால, வொழுகுநீ ராரல் பார்க்குங், குருகுமுண்டு” (ஒ) “தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை” (ஓ) “தாழை வெண்பூக், குருகென மலரும் பெருந்துறை” (ஒள) “பிணர்முடத் தாழை விரிமலர் குருகென, நெடுங்கழிக் குறுங்கயல் நெய்தலுண் மறைந்தும்” (ஃ) “குருகிருந் தன்ன; வண்பிணி யவிழ்ந்த வெண்கூ தாளத், தலங்குகுலை யலரி“ (அஅ) “துறைபோ கறுவைத் தூமடி யன்ன, நிறங்கிளர் தூவிச் சிறு வெள்ளாங் குருகே” (ஆஆ) “யாழ், நரம்பிசைத் தன்ன வின்குரற் குருகின்” (இஇ) “விருந்தின் வெண்குரு கார்ப்பின்.........பண்ணமை நெடுந்தேர்ப் பாணியினொலிக்குந், தண்ணந் துறைவன்” (ஈஈ) “வெள்ளாங்குருகின் பிள்ளை” (உஉ) “யானையங் குருகின் கானலம் பெருந்தோ, டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉங், குட்டுவன் மரந்தை” என வருபவை இங்கே அறிதற்பாலன. வடமொழியில் ‘க்ரௌஞ்சகிரி’ என்பது தமிழில் ‘குருகுபெயர்க் குன்றம்’ என்று கூறப்படுதலானும் (பிரதிபேதம்) 1ஞாயிற்றுவிளக்கத், 2நன்பகல்.
|