8 | மாணெழின் மாதர் மகளிரோ டமைந்தவன் காணும்பண் பிலனாத லறிவேன்மன் னறியினும் பேணி யவன்சிறி தளித்தக் காலென் னாணி னெஞ்ச நெகிழ்தலுங் காண்பல்; | 12 | இருளுற ழிருங்கூந்தன் மகளிரோ டமைந்தவன் றெருளும்பண் பிலனாத லறிவேன்மன் னறியினு மருளி யவன்சிறி தளித்தக் காலென் மருளி நெஞ்ச மகிழ்தலுங் காண்பல்; | 16 | ஒள்ளிழை மாதர் மகளிரோ டமைந்தவ னுள்ளும்பண் பிலனாத லறிவேன்மன் னறியினும் புல்லி யவன்சிறி தளித்தக் காலென் னல்ல னெஞ்ச மடங்கலுங் காண்பல்; | 20 | அதனால்; | | யாம நடுநாட் டுயில்கொண் டொளித்த காம நோயிற் கழீஇய நெஞ்சந் தானவர் பாற்பட்ட தாயி னாமுயிர் வாழ்தலோ நகைநனி யுடைத்தே. |
இது காமஞ்சாலா இளமையோள்வயிற் பின் களவொழுக்கம் ஒழுகிய தலைவன் இடையிட்டுப் பிரிந்து தொன்முறை மனைவியரொடு புணர்ச்சி யெய்தி இருந்தானாக, அதனையறிந்து ஆற்றாளாய தலைவி 1ஆற்றாமையைக் கண்டு வினாய தோழிக்கு அத்தலைவி அவனொழுகுகின்றவாறுந் தன்னெஞ்சு அவன் வயத்ததாயவாறுங் கூறியது. “மறையின் வந்த மனையோள் செய்வினை, பொறையின்று பெருகிய 2பருவாற் கண்ணும்” (1) என்பதனானும் “பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவை” என்னும் (2) சூத்திரத்தானு முணர்க. இதன் பொருள். | கோதை யாயமு மன்னையு மறிவுறப் போதெழி லுண்கண் புகழ்நல னிழப்பக் காதல்செய் தருளாது துறந்தார்மாட் டேதின்றிச் |
1. தொல். கற். சூ. 10. 2. தொல். கற். சூ. 31. (பிரதிபேதம்) 1ஆற்றாமைகண்டு, 2பருவரற்கண் என்பதனானும்.
|