பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்767

சிறிய துனித்தனை துன்னாசெய் தமர்ந்தனை
பலவுநூ றடுக்கினை யினைபேங்கி யழுதனை
யலவலை யுடையை யென்றி தோழீ

கேளினி

எ - து: (1) கோதைபோல ஒழுங்குவிட்டு விளையாடும் ஆயத்தாரும் தாயும் அறிதலுறும்படி பூவினது அழகையுடைய கண்கள் புகழ்ந்த நலத்தை இழக்கும்படி முன்னர் நம்மிடத்தே மிக்க காதலை நிகழ்த்திப் பின்னர் நமக்கு அருளாதே ஒருகாரண 1மின்றி நம்மைத் துறந்தாரிடத்தே முன்னர்ச்சிறியவாக வெறுத்தனை; பின்னர் அவர் நமக்குப் பொருந்தாக் குறைகளைச் செய்கையினாலே அக்குறைகள் பல நூறுமாக அடுக்கிக்கூறி அதிலே அமர்ந்தனை; அதுவேயுமன்றி வருந்திஏங்கி அழுவதுஞ்செய்தாய்; ஆகலான்நீ (2) அருமருதலையுடையையாயிருந்தாயென்று சொல்லாநின்றாய்; தோழீ! இனி அலமரலைக்கேளென்றாள். எ - று.

ஏது, வடமொழி திரிந்து விகாரமாய் நின்றது.

(3) மாணெழின் மாதர் மகளிரோ டமைந்தவன்
காணும்பண் பிலனாத லறிவேன்மன் னறியினும்
பேணி யவன்சிற் தளித்தக் காலென்
னாணி னெஞ்ச நெகிழ்தலுங் காண்பல்


1. (அ) “திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய, துணையறை மாலையிற் கைபிணி விடேஎம்” குறிஞ்சி. 176 - 177. (ஆ) “கோதையாயமொ டோரை தழீஇ” அகம். 49 : 16. (இ) “கடம்பு சூடிய கன்னிமாலை போற், றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடும்” சீவக. 990.

2. அலவல் - அலமருதல் போலும்; “அலவுற்று” (குறிஞ்சி. 7) என்பதற்கு, ‘அலம் வந்து’ என்று பொருளெழுதப் பட்டிருத்தலும் காண்க. ‘அலவலை’ எனின் மனத்திற் றோன்றியதை ஆராயாது செய்தலாம்; “அலவலை யில்லாக் குடியும்” திரிகடுகம். 34 “அலவலைச் செய்திக் கஞ்சினன்” மணி. 7 : 51. “அலவலை நீர்த்தா லத்தைநின் னலரென” பெருங். (1) 36 : 386. எனவருதல்காண்க. “அலவலைத்து வாழ்பவர்” பழ. 326. என்பதற்கு ‘நாணமில்லாததன்மையைச் செய்து வாழ்பவர்’ என்று பொருள்செய்திருப்பது நோக்கி அலவலை யென்பதற்கு, நாணமின்மை யென்று பொருள் கொள்வாரு முளர். பின் “நாணி னெஞ்சம்” என வருதலும் நோக்குக.

3. கலி. 67 - ஆம் செய்யுட்டாழிசைகள் இங்கே ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்) 1இன்றியே நம்மை.