எ - து. மாட்சிமையையுடைய அழகினையுங் காதலையுமுடைய மனைவியரோடே அவன் பொருந்தி நம்வருத்தத்தைப் பார்க்குங் குணமிலனாயிருத்தலை மிகவும் அறிவேன்; அறிந்திருப்பினும் அவன் வந்து என்னைப் (1) பேணிச் சிறிதாக அளிக்க என்னுடைய நாணமில்லாத நெஞ்சம் என்வயத்ததன்றி அவனிடத்தே நெகிழ்ந்து செல்லுதலையுங் கண்டிருப்பேன். எ - று. 12 | (2) இருளுற ழிருங்கூந்தன் மகளிரோ டமைந்தவன் றெருளும்பண் பிலனாத லறிவேன்மன் னறியினு மருளி யவன்சிறி தளித்தக் காலென் மருளி நெஞ்ச மகிழ்தலுங் காண்பல் |
எ - து: இருளோடே மாறுபடுகின்ற கரிய கூந்தலையுடைய தொன்முறை மனைவியரோடே அவன் பொருந்தி நம் வருத்தத்தைத் தெளியுங் குணமிலனாயிருத்தலை மிகவும் அறிவேன்; அறிந்திருப்பினும் ஒருகால் அருள்பண்ணி அவன் சிறிதாக அளிக்க என்னுடைய மருளியாகிய 1நெஞ்சம் அதற்கு மகிழ்தலையுங் கண்டிருப்பேன். எ - று. 16 | ஒள்ளிழை மாதர் மகளிரோ டமைந்தவ னுள்ளும்பண் பிலனாத லறிவேன்மன் னறியினும் புல்லி யவன்சிறி தளித்தக் காலென் னல்ல னெஞ்ச மடங்கலுங் காண்பல் |
எ - து: ஒள்ளிய இழையினையுங் காதலையுமுடைய தொன்முறைமனைவியரோடே அவன் பொருந்தி நம்மை நினைக்குங் குணமிலனாதலை 2மிகவும் அறிவேன்; அறிந்திருப்பினும் அவன் சிறிதாகப்புல்லி அளிக்க என்னுடைய வருத்தத்தையுடைய நெஞ்சம் வருத்தமீளுதலுங் கண்டிருப்பேன். எ - று. 20 | அதனால் | | (3) யாம நடுநாட் டுயில்கொண் டொளித்த காம நோயிற் கழீஇய (4) நெஞ்சந் |
1. “துனிசிறந் திழிதருங் கண்ணினீ ரறல்வார, வினிதமர் காதலனிறைஞ்சித்தன் னடிசேர்பு, நனிவிரைந் தளித்தலி னகுபவண் முகம் போல” கலி. 71 : 4 - 6. 2. “இருளுற ழிருங்கூந்த லிவண்மாட்டு” கலி. 49 : 18. 3. “யாமத்துந் துயிலல ளலமரு மென்றோழி” (கலி. 45 : 18.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 4. கலி. 67 : 19 : 21, 77 : 21 - 24 -ஆம் அடிகளும் அவற்றின் குறிப்புக்களில் இவ்விடத்துக்குப் பொருந்துவனவும் இங்கே அறிதற்பாலன. (பிரதிபேதம்) 1நெஞ்சமகிழ்தலையும், 2மிகவறிவேன்.
|