பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்769

1தானவர் பாற்பட்ட தாயி
னாமுயிர் வாழ்தலோ நகைநனி யுடைத்தே

எ - து: ஆகையினாலே காமநோயாலே மிக்க நெஞ்சந்தான் (1) நடுநாள் யாமத்தில் நாங்கொள்ளுந் துயிலைவாங்கிக் கொண்டு ஒளித்தவர் பகுதியிலே பட்டுவிட்டதாயின், இனி நாமிருந்து உயிர்வாழ்கையோ மிகப் பிறர் சிரித்தலையுடைத்தென்று தோழி வரைவுகடாவுதற்குக் கூறினாள். எ - று.

இதனால், ‘தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தையும்’ (2) கூறினாள்.

இதனால், தலைவிக்கு 2இழிவு பிறந்தது.

இது, கேளினி எனச் சொற்சீரடிவந்தமையிற் கொச்சகம். (5)

123

(3) கருங்கோட்டு நறும்புன்னை மலர்சினை மிசைதொறுஞ்
சுரும்பார்க்குங் குரலினோ டிருந்தும்பி யியைபூத
வொருங்குட னிம்மென விமிர்தலிற் பாடலோ
டரும்பொருண் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போற்
பெருங்கட றுயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்;

6

காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான்
மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ
காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே;

9

கொல்லேற்றுச் சுறவினங் கடிகொண்ட மருண்மாலை
யல்லனோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ
புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மடநெஞ்சே;

12

வெறிகொண்ட புள்ளினம் வதிசேரும் பொழுதினாற்
செறிவளை நெகிழ்த்தான்கட் சென்றாய்மற் றவனைநீ
யறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே;

எனவாங்கு;


1. நடுநாள் - இடையாமம்; “நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்” புறம். 189 : 3.

2. தொல். கள. சூ. 20.

3. இச்செய்யுள், தரவகப்பட்ட மரபிற்றாகித் தாழிசை வந்ததற்கும் (தொல். செய். சூ. 134. பேர்.) தரவிற்கு அடியைந்தாகச் சுரிதகம் நான்கடியாய்ச் சுருங்கி வந்ததற்கும் (தொல். செய். சூ. 137. பேர்) மேற்கோள்.

(பிரதிபேதம்) 1தாமவர், 2இளிவு.