16 | எல்லையு மிரவுந் துயிறுறந்து பல்லூ ழரும்பட ரவலநோய் செய்தான்கட் பெறனசைஇ யிருங்கழி யோதம்போற் றடுமாறி வருந்தினை யளியவென் மடங்கெழு நெஞ்சே. |
இது காப்புமிகுதிக்கண் ஆற்றாத தலைவி தலைவன்பாற்சென்ற நெஞ்சினை நோக்கி அழிந்து கூறியது. இதன் பொருள். | (1) கருங்கோட்டு நறும்புன்னை மலர்சினை 1மிசைதொறுஞ் சுரும்பார்க்குங் குரலினோ (2)டிருந்தும்பி 2யியைபூத வொருங்குட னிம்மென விமிர்தலிற் பாடலோ டரும்பொருண்மரபின்மால் (3) 3யாழ்கேளாக் கிடந்தான்போற் பெருங்கட றுயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல் |
எ - து: கரியகொம்பினையுடைய 4புன்னையின் சிறிய சினையில் நறியதாகிய 5மலர்தோறும் (4) மலருஞ்செவ்வி பார்த்து நுகருதற்குச் சுரும்பினம் ஆரவாரிக்கும் ஓசையோடே 6கரிய தும்பிகளும் ஒருங்கியைந்து ஊத எழுந்த குரலுஞ் சேர இம்மெனும் ஓசைபட ஒலிக்கையினாலே அவற்றைக்கேட்டு யாவராலும் பெறுதற்கரியபொருளாகிய முறைமையினையுடைய திருமால் பாட்டோடே யாழையுங்கேட்டுப்
1. (அ) "இரும்பி னன்ன கருங்கோட்டுப்புன்னை"(ஆ) "கருங்கோட்டுப் புன்னை மலரிற்றாதருந்தி, யிருங்களிப் பிரச மூத" நற்.249 : 1, 311 : 9 - 30;(இ) "கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில்” குறுந்.123.(ஈ) “கருங்கோட்டுப் புன்னைத் தங்குந்துறைவற்கு” ஐங். 161;(உ) “பெருங்காற் புன்னைக் கருங்கோட்டு்” பெருங்.(1) 40 : 98.(ஊ) “இரும்புகவைத் தன்ன கருங்கோட்டுப் புன்னை”கல். 36 : 19 என்பவற்றால் புன்னைகருங்கோட்டதென்பது விளங்கும்.அம்மரத்தைப்பற்றிய மற்றைச் செய்திகள் கலி.136 : 13 - ஆம் அடிக்குறிப்பிற் காணலாகும். 2. (அ) “இருந்தும்பி யியைபூத” கலி. 127 : 31.(ஆ) “திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி,யின்குழ லூதும் பொழுது” கார். 15. 3. யாழ் கேட்டா னென்னு மிடத்து யாழிற்பிறந்த இசையை யாழென்றலால், அது பிறந்தவழிக்கூறலென்னும் ஆகுபெயரென்பர் தெய்வச்; தொல்.வேற்றுமைமயங்கி, சூ. 30. ‘முதலிற்’ 4. “மலராக்காற், செல்லாவாஞ் செம்பொறிவண்டினம்” நாலடி. 283. (பிரதிபேதம்) 1மீமிசைச் சுரும்பார்க்குங் குழலினோடு, 2இசையூத,3யாழ்கொளக்கிடந், 4புன்னையினுடைய சிறிய,5மலர்மிசைதொறும், 6கரியதாகிய.
|