பள்ளிகொண்டவனைப்போலப் பெரிதாகிய கடலும் ஒலியவிந்து உறக்கத்தைக்கொள்ளும் வண்டு ஒலிக்கின்ற கானலின் கண்ணே. எ - று. நெஞ்சே சென்றாய் என மேலே கூட்டுக. ஓதம் வடிந்தகாலத்து மிக்க ஒலியின்மை பற்றிக் கூறிற்று. புன்னை மலருஞ் செவ்விபார்த்து அவற்றை நுகர்தற்குரியன நுகர்கின்ற மையுங் கண்டு யாமுங் காமச்செவ்வி அறிந்து நந் தலைவர் நுகரப்பெற்றிலே மேயென்று வருந்தியும், பாட்டையும் யாழையும்போலும் ஓசைகேட்டுக் கடலுட்படத் துயில்கின்ற காலத்தே யாமும் அவற்றைக் கேட்டுத் தலைவனிடத்தே துயிலப் பெறுகின்றிலேமேயென்று வருந்தியும், நெஞ்சுசென்றதென மேலே வருகின்ற இரங்கற்பொருட்கு முன்னின்ற கருப்பொருள் இறைச்சிப் பொருளாய் நின்று உபகாரப்பட்டு நின்றது. இஃது, “இறைச்சி தானே பொருட்புறத் ததுவே” (1) என்பதனான் உணர்க. 6 | (2) காணாமை யிருள்பரப்பிக் கையற்ற 1கங்குலான் (3) மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனை (4) நீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே |
எ - து: அறியாமையுடைய நெஞ்சே! கானலின்கண்ணே பொருள்களைக் கண்கள் காணாதபடி இருளைத்தான் பரப்பி உயிர்களெல்லாஞ் செயலறுதற்குக் காரணமான கங்குலிடத்தே ஒரு மருந்தாலும் மாட்சிமைப்படாத காமநோயைச் செய்தவனிடத்தே 2போனாய்; போன நீ பின்னை அவனைக் கண்ணாற் காண என்கின்ற அவ்வளவுதானும் பெற்றாயோ, அவனைக் காணாதிருந்தாயோ கூறென்றாள். எ - று. உம்மை இழிவுசிறப்பு. 3இனிக் காணப்பெற்றாயோ இல்லையோ என 4ஓகாரத்தைஐயமாக்கி உரைத்ததுநிற்க, நீ அவனாற் காணப்பட்டாயெனக்கூறி 5ஓகாரத்தினை இரக்கமாக்கிக் கூறலுமாம். இது 6நடுயாமத்துச் சென்றமை கூறினாள்
1. தொல். பொருளி. சூ. 35. 2. “காணாமை.........காணாயோ மடநெஞ்சே” என்பது தாழிசையெனவும் இடைநிலைப் பாட்டெனவும் படுமென்பர் பேராசிரியர்; தொல். செய். 132. நச்சினார்க்கினியரும் அவ்வாறே கூறுவர்; தொல். செய். சூ. 137. 3. (அ) “மாணாநோயுழப்பதை” கலி. 132 : 19. மாணாமை, அளவிறத்தலென்னும் பொருளிலும் வரும். 4. நெஞ்சோடு கேட்குந போலக் கூறியதற்கு “நீ.........................நெஞ்சே” என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 200. நச். (பிரதிபேதம்) 1கங்குல்லாய், 2போனாய்நீ, 3இனிப்பெற்றாயோ,4ஓகாரமைய, 5இரக்கமாகக்கூற, 6நடுவியாமத்து.
|