9 | (1) கொல்லேற்றுச் (2) சுறவினங் கடிகொண்ட மருண்மாலை யல்லனோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ புல்லவும் பெற்றாயோ மடநெஞ்சே |
எ - து: மடநெஞ்சே! கானலின்கண்ணே கொல்கின்ற (3) ஏறாகியசுறவி னுடைய திரள் போவாரைப் போகாமற்காத்தலைக்கொண்ட மயக்கத்தையுடைய மாலைக்காலத்தே வருத்தத்தையுடைய காமநோயைச் செய்தவனிடத் தேபோனாய்; போன நீ பின்னை அவனைப் புல்லஎன்கின்ற அவ்வளவுதானும் பெற்றாயோ, புல்லாதிருந்தாயோ கூறென்றாள். எ - று. இனிப் புல்லப்பெற்றாயோ இல்லையோ என ஒகாரத்தை ஐயமாக்கி உரைத்ததுநிற்க, 1 நீ அவனாற் புல்லப்பட்டாயெனக்கூறி ஓகாரத்தினை இரக்க மாக்கிக் கூறலுமாம். 12 | 2வெறிகொண்ட (4) புள்ளினம் 3வதிசேரும் பொழுதினாற் செறிவளை நெகிழ்த்தான்கட் சென்றாய்மற் றவனை (5) நீ யறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே |
1. தொல். செய். சூ. 134. நச். மேற்கோளில் ‘கொல்லேற்று’ என்னும் தாழிசை மூன்றாவதாகவும் ‘வெறிகொண்ட’ என்னும்தாழிசை இரண்டாவதாகவும் காணப்படுகின்றது. 2. “செழுங்கதிர் மண்டில, மால்வரை மறைய.........மல்குகழித், துணைச்சுறா வழங்கலும் வழங்கும்” 3. (அ) “கடல்வாழ் சுறவு மேறெனப் படுமே” தொல். மர. சூ. 9. (ஆ) “சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி” தொல். கள. சூ. 23. மேற்கோள். என்பனவும் (இ) “கோட்சுறா வினத்தொடு” (சீவக. 95) என்பதன் விசேடவுரையில் ‘முன்னே கழியணைந்தமைபெறுதலின், சுறவு கூறினார்’ என்று எழுதியிருப்பதும் (ஈ) கடல் ‘மகராலயம்’ என்று கூறப்படுதலும் நோக்க, சுறவு நெய்தனிலத்திற்கே உரியதென்று கொள்ளலாகும். (உ) மேலுள்ள தொல்காப்பியச் சூத்திரத்தின் இளம் பூரணருரையில், ‘பிள்ளைச்சுறவு, யாற்றுச் சுறவு உண்மையின், செய்யுட்காவது கடல்வாழ் சுறவொன்றே யெனப் பிரித்தான்’ என ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இச்செய்தி ஆராய்தற்பாலது. 4. “புள்ளின மிரைமாந்திப் புகல்சேர” கலி. 122 : 4. 5. “நீ.........நெஞ்சே” என்பது உணர்வுடையதுபோல் நகைபற்றிக் கூறியதற்கு மேற்கோள்; தொல். பொருளி. சூ. 2. நச். (பிரதிபேதம்) 1தானவனைப் புலப்புட்டா, 2பொறிகொண்ட, நெறிகொண்ட, 3பதிசேரும்போழ்தினால்.
|