பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்773

எ - து: மடநெஞ்சே! அக்கானலின்கண்ணே ஒழுங்குகொண்ட பறவைத்திரள் தாந் தங்கும் இடத்தே சென்றுசேரும் மாலைக்காலத்தே முன்பு செறிந்தவளை கழலப் பண்ணினானிடத்தே போனாய்; போன நீ பின்னை அவனை மனத்தினை 1அறிய என்கின்ற அவ்வளவுதானும் பெற்றாயோ, அதுதானும் அறியாதிருந்தாயோ கூறென்றாள். எ - று.

இனி அறியப் பெற்றாயோ இல்லையோ என ஓகாரத்தை ஐயமாக்கி உரைத்ததுநிற்க, நீதான் அவனாலறியப்பட்டாயென உரைத்து ஓகாரத்தை இரக்கமாக்கலுமாம்.

2எனவாங்கு அசை.

16

எல்லையு மிரவுந் துயிறுறந்து பல்லூ
(1) ழரும்பட ரவலநோய் செய்தான்கட் பெறனசைஇ
யிருங்கழி யோதம்போற் (2) றடுமாறி
வருந்தினை 3யளியவென் மடங்கெழு நெஞ்சே

எ - து: அது கூறாமையின், பின்னும் அறியாமை பொருந்திய அளிக்கத் தக்க என்னெஞ்சே! பொறுத்தற்கரிய வருத்தத்தையுடைய காமநோயைச் செய்தவனிடத்தே பகலுமிரவுந் துயிலைக் கைவிட்டுக் கரியகழியில் ஓதம் போதுவதுவருவதாய்த் தடுமாறுந் தன்மைபோல நீயும் பலமுறையாகச் சென்றும் வந்துந் தடுமாறி அவனைப் பெறுதல் நச்சி முடிவில் வருந்திவிட்டாய்; 4ஈதன்றோ நீபெற்றதென நெஞ்சினைநோக்கி அழிந்துகூறினாள். எ - று.

இஃது “உறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன், மறுத்துரைப் பதுபோ 5னெஞ்சொடு புணர்த்தும்” (3) என்பதனாற்கூறியது.


1. “அரும்படரவலநோ யாற்றுவ ளென்னாது” (கலி. 28 : 10.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

2. (அ) “மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்ப, னணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற், றிணிமண லெக்கர்மே லோதம் பெயரத், துணிமுந்நீர் துஞ்சா தது” (ஆ) “பறைவா யொலியோதம் பந்தருகளுந், துறைசேர் சிறுகுடியார் துஞ்சினுந் துஞ்சாய், நிறையின் மருண்மாலை யெம்போல நீத்த, துறைவ னுடையையோ நீவாழி வீராய்” (இ) “வருதி பெயர்தி வருந்துதி துஞ்சாய், பொருதி புலம்புதி நீயுங் - கருதுங்காற், பண்டினை யல்லையாற் பாழித்தோட் கோதையைக், கண்டனையோ வாழி கடல்” (ஈ) “போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி, நாவாய் குழற நடுங்குறுவாய்......ஆர்கலியே”

3. தொல். பொருளி. சூ. 2.

(பிரதிபேதம்) 1நீ அறிய, 2ஆங்க எல்லையும், 3அளியையென். 4இதுவன்றோ. 5நெஞ்சொடு கிளத்தலென்பதனால்.