124 | ஞாலமூன் றடித்தாய முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியா னணிபெறத் தைஇய நீலநீ ருடைபோலத் தகைபெற்ற வெண்டிரை வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப; | 5 | ஊரல ரெடுத்தரற்ற வுள்ளாய்நீ துறத்தலிற் கூருந்தன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற் காரிகை பெற்றதன் கவின்வாடக் கலுழ்பாங்கே பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்; |
9 | இணைபிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலிற் புணையில்லா வெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற் றுணையாருட் டகைபெற்ற தொன்னல மிழந்தினி யணிவனப் பிழந்ததன் னணைமென்றோ ளல்லாக்கால்; |
13 | இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலி னின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன் வென்றவே னுதியேய்க்கும் விறனல னிழந்தினி நின்றுநீ ருகக்கலுழு நெடும்பெருங்க ணல்லாக்கால்; |
17 | அதனால்; |
| பிரிவில்லாய் போலநீ தெய்வத்திற் றெளித்தக்கா லரிதென்னா டுணிந்தவ ளாய்நலம் பெயர்தரப் புரியுளைக் கலிமான்றேர் கடவுபு விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே. |