பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்775

124

ஞாலமூன் றடித்தாய முதல்வற்கு முதுமுறைப்
(1) பாலன்ன மேனியா னணிபெறத் தைஇய
(2) நீலநீ 1ருடைபோலத் தகைபெற்ற வெண்டிரை
வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப

எ - து: (3) உலகமூன்றையும் தன்திருவடியாலே அளந்த எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவனுக்கு மூத்தமுறைமையினையுடைய (4) நம்பிமூத்தபிரான் அழகுபெற உடுத்த நீலத்தினது நீர்மையையுடைய ஆடையை ஒக்கம்படி அழகைப்பெற்ற வெண்டிரையினையுடைய கடல் வெண்மையையுடைய இடுமணலிடத்தே வந்து சூழ்ந்து விளங்குகின்ற 2நீரையுடைய தண்ணிய 3சேர்ப்பனே. எ - று.

வெண்மை திரைக்கு அடையாய்த் திரை ஆகுபெயராய் நின்றது; 4நீலவுடைக்கு வெண்மை 5ஒப்பன்மையின்.

கடல் தன்கரையை இகவாமை நிற்கின்ற சேர்ப்பனென்றதனால், நீயும் குடிப்பிறந்தார்க்குவரைந்துகொண்டு இல்லறநிகழ்த்தவேண்டுமென்று 6கூறிய கரையைக் கடவாமல் வரைந்துகோடல் வேண்டு 7மென்று உள்ளுறையுவமங் கொள்க.

5

ஊரல ரெடுத் 8தரற்ற வுள்ளாய்நீ (5)துறத்தலிற்
கூருந்தன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற்


1. “பானிற வண்ணன்போல்” கலி. 104 : 8.

2. (அ) “அலத்தான் முன்னம் பிளந்தபகை யடர்ப்பான் கருதிப் பிளப்புண்ட, சலத்தால் யமுனை பிணித்ததெனத் தயங்கும் படிசேர் தானை யினான்” வில்லி. திளௌபதி. 40. (ஆ) “துளங்கொளி நீலநுண்டுகிலு டுத்தநல், லிளங்களி றன்னவவ் விராமனோடு” (இ) “கொய்யு நாண்மலர் விரைகமழ் யமுனை கொய்யாத, செய்ய பொற்றுணர்த் தேந்தொடை யொன்றொடு செறிந்த, நெய்யி ருங்குழ லிரேவதி கொழுநற்கு நெய்யா, வைய நீலநுண் டுகிலிரண் டளித்ததையன்றே” பாகவ. அக்குரூரன்வந்த: 11. நம்பிமூத்தபிரான் கோகுல. 8.

3. “மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகைமுடியத், தாவியசே வடி” சிலப். 17.

4.இந்நூற்பக்கம் 144 : 2 - ஆம் குறிப்புப் பார்க்க.

5.“தன்னெவ்வங் கூரினு நீசெய்த வருளின்மை, யென்னையு மறைத்தாளென் றோழி” (கலி. 44 : 8 - 9) என்பதும் அதன் குறிப்புகளில் இவ்விடத்துக்கு ஒத்தனவும் இங்கே ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்) 1உடையேபோற்றகை, 2திரையையுடைய, 3சேர்ப்பனே கடல் தன் கரையை.........உள்ளுறை உவமங்கொள்க வெண்டிரை திரைக்கு, 4நீலவாடைக்கு, 5ஒப்பன்மையின் ஊரலர், 6கூறிக் கரையை, 7என்ற உள்ளறை, 8ஆர்ப்பவுள்ளாய்.