பக்கம் எண் :

776கலித்தொகை

காரிகை பெற்றதன் கவின்வாடக் கலுழ்பாங்கே
(1) பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்

எ - து: காரிகைபெற்ற 1தன் அழகு கெடும்படி மனங்கலங்குதலாலே அப்பொழுதே பீர்க்கினது பூவினது அழகைத் தன்னிடத்தேகொண்ட பிறைபோலும் நுதலல்லாத இடத்து, இவ்வூரிலுள்ளார் அலரை உயர்த்துக் கூப்பிடும்படி நீ இவளைக் கைவிடுகையினாலே மிகுகின்ற தன்னுடைய வருத்தத்தையுடைய (2) காமநோயை என்னையும் உட்பட மறைத்தாள்; அதனாற் பெற்றதென்? நுதல் புலப்படுத்தா 2நின்றதே. எ - று.

காரிகைபெற்ற தன் கவின் - பிறர் இவளழகைப் பெறுதற்குக் காரணமான தன் அழகு; என்றது 3பிறர் (3) மகளுக்கு ஒப்புக் கூறுமிடத்து இவள் உவமையாய் நிற்பளென்பதாம்.

6

இணைபிவ்வூ ரலர்தூற்ற (4) வெய்யாய்நீ துறத்தலிற்
புணையில்லா வெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற்
றுணையாருட் டகை 4பெற்ற தொன்னல மிழந்தினி
யணிவனப் 5பிழந்ததன் (5) னணைமென்றோ ளல்லாக்கால்


1. "நுதல், பீரல ரணிகொண்ட பிறைவனப் பிழவாக்கால்" (கலி. 53. 14 - 15.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

2. "என்றுதன் னகம்புடை யியலக் காளையா, லொன்றிய வுள்ளநோ யொளிக்க லுற்றன, ளின்றிவ ளகத்தது காமநோ யெனப், பொன்றவழ் பசலைமெய் புகல லுற்றதே" சூளா. கல்யாண. 219.

3. (அ) “உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும், பிறர்க்கு நீ வாயினல்லது நினக்குப், பிறருவம மாகா வொருபெரு வேந்தே” பதிற். 73 : 1 - 3. என்பதும் (ஆ) “சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர்மிகு பொருந” (திருமுருகு. 275. 6.) என்புழி, “பெருந” என்பதற்கு, ‘உவமிக்கப்படுவாய்’ என்று உரையும், ‘பொருவப்படுமவன், பொருநனென நின்றது’ என்று விசேடவுரையும் (இ) “பொருப்பிற் பொருந” (மது. 42.) என்புழி, “பொருந” என்பதற்கு ‘ஒப்பற்றவனே’ என்று உரையும் ‘பொருநனென்றது தான் பிறர்க்கு உவமிக்கப்படுவானென்னும் பொருட்டு’ என்று எழுதியிருக்கும் விசேடவுரையும், (ஈ) “ஒரு வீரரு முவமைக்கெதி ரில்லாவிற லுரவோன்” வில்லி. மணிமான், 28. என்பதும் ஈண்டு அறிதற் பாலண.

4. “எய்யா மையே யறியா மையே” தொல். உரி. சூ. 44,

5. “அணைமென்றோள்” பரி. 7 : 55. இந்நூல் 400 : 4 குறிப்புப் பார்க்க.

(பிரதிபேதம்) 1 தன்கவின் பிறர் இவ................நிற்பளென்பதாம், 2 நின்றதே இணையிவ்வூர், 3 பிறமகளுக்கு, 4 பெறத்தொன், 5 இழந்தன்னவணை.