| புலந்தழப் புல்லாது விடுவா யிலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காணீ; | 16 | இன்மணிச் சிலம்பிற் சின்மொழி யைம்பாற் பின்னொடு கெழீஇய தடவர வல்கு னுண்வரி வாட வாராது விடுவாய் தண்ணந் துறைவ தகாஅய் காணீ; | | எனவாங்கு; | 21 | அனையளென் றளிமதி பெரும நின்னின் றிறைவரை நில்லா வளைய ளிவட்கினிப் பிறையேர் சுடர்நுதற் பசலை மறையச் செல்லுநீ மணந்தனை விடினே. |
இது வரைவுநீட ஆற்றாத தலைவிநிலைமை தலைவற்குத் தோழி கூறி அவனை நெருங்கி வரைவுகடாயது. இதன் பொருள். | (1) கண்டவ ரில்லென 1வுலகத்து ளுணராதார் தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளு ணெஞ்சறிந்த கொடியவை 2மறைப்பினு மறிபவர் நெஞ்சத்துக் குறுகய கரியில்லை யாகலின் வண்பரி நவின்ற வயமான் செல்வ நன்கதை யறியினு நயனில்லா (2) நாட்டத்தா லன்பிலை யெனவந்து கழறுவ லையகேள் |
1. (அ) “தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின், றன்னெஞ்சே தன்னைச் சுடும்” என்னுங் குறளின் உரையில் நெஞ்சு கரியாதற்கு, “கண்டவ ரில்லென.........கரியில்லை யாகலின்” என்னும் அடிகளை மேற்கோள்காட்டி, ‘பொய்மறையாமையின் அது கூறலாகாதென்பது இதனாற் கூறப்பட்டது’ என்பர், பரி; குறள், 293. (ஆ) “தன்னைத்தன் னெஞ்சங் கரியாகத் தானடக்கிற், பின்னைத்தானெய்தா நலனில்லை” அறநெறி. 207. (இ) “வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும், வஞ்சித்தோமென்று மகிழன்மின் வஞ்சித்த, வெங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி, யங்கங் குலைவ தறிவு” நீதிநெறி. 94. என்பவை இங்கே அறிதற்பாலன. 2. நாட்டம் - ஆராய்ச்சி, புறம். 35 : 14, 70 : 11. (பிரதிபேதம்)1உலகத்துணராதார், 2மறைப்பவு மறையாவா னெஞ்சத்திற் குறுகிய.
|