எ - து: அறியாதவர்கள் தம் மனம் இது செய்யலாகாதென்று மீளாதே வேறு விலக்குவாரும் இன்றி உலகத்திற் கண்டவர்களும் இல்லையென்று கருதித் தாஞ் செய்யுந் தீவினைகளுள் தாம் நெஞ்சறியவே செய்த கொடிய தீவினைகளைப் பின்பு பிறர் அறியாமல் மறைத்தார்களாயினும் தாஞ் செய்தமையை அறிந்திருக்கின்றவர்கள் தம்முடைய நெஞ்சத்திற்காட்டில் அணுகிய சான்று வேறில்லையாகையினாலே வளவிய பரியிலேபயின்ற வலியினையுடைத் தாகியகுதிரையையுடைய செல்வனே! நின்னை யான் கழறவேண்டுவதில்லை. அக்கழறவேண்டாமையை நன்றாக அறிந்தேனாயினும் நின்னோடு யான் கொண்ட நலம்பாடில்லாத ஆராய்ச்சியாலே நீ அன்புடையை யல்லையென்று சொல்லிவந்து நின்னைக்கழறுவேன்; ஐயனே! நீ அதனைக்கேள். எ - று. நயன் - உறவு (மாம்.) 8 | (1) மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூ ழிளமுலை முகிழ்செய (2) 1முள்கிய தொடர்பவ ளுண்க (3) ணவிழ்பணி யுறைப்பவு நல்காது விடுவா யிமிழ்திரைக் கொண்க கொடியை காணீ |
எ - து: மகிழ்ச்சியைச் செய்கின்ற 2இனிமையுடைத்தாகிய மொழியினை யுடையாளுடைய தொய்யில் எழுதின இளையமுலை தோன்றுதலைச் 3செய்யா நின்ற இளமைப்பருவத்தே நீ கூடிய தொடர்ச்சியை, அவள்கண் தோற்றுவித்தநீர் துளியாகவிழவும் அதுகண்டுநல்காது விடுகின்றவனே! ஒலிக்கின்ற திரையையுடைய கொண்கனே! நீ மிகக் கொடியைகாண். எ - று. 12 | (4) இலங் (5) கே ரெல்வளை யேர்தழை தைஇ நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப் 4புலந்தழப் புல்லாதுவிடுவா (6) யிலங்குநீர்ச் சேர்ப்ப 5கொடியை காணீ |
1. தோழி தலைவனை “அன்பிலை கொடியை” என்றற்கு, “மகிழ்செய்.........சேர்ப்ப கொடியை காணீ” என்னும் பகுதிகள் மேற்கோள்; தொல். கற்பி. சூ. 15. ‘பரத்தைவாயில்’ இளம். 2. முள்குதல் - கூடுதல்; சீவக. 420, 687, 1413, 1514, 1686. 2184. 3. வகர மகரமும் தம்முள் ஒன்றற்கொன்று எதுகையெனப்படும். உயிரெதுகை, மூன்றா மெழுத்தொன்றெதுகை யென்பாருமுளர். 4. “இலங்கே ரெல்வளை” கலி. 7 : 16; 46 : 27. 5. இந்நூற்பக்கம் 358 : 4 - ஆம் குறிப்புப் பார்க்க. 6. “இலங்குநீர்த் தண்சேர்ப்ப” கலி. 126 5, (பிரதிபேதம்)1மூழ்கிய, 2இனிமையையுடைத்தாகிய, 3செய்யா நிற்கின்ற, 4புலந்தழவுலந்தழீஇப் புல்லாது(என்பது தொல். பிரதிபேதம்), 5வலியை.
|