எ - து: எல்வளையினையுடையாளது அழகையுடைய (1) தழையை உடுத்து இலங்குகின்ற இளமைப்பருவத்து 1எழுச்சியினுடைய நலம் மேன்மேல் வளர்ந்துசெல்லும்படி நீ நல்கிய தொடர்ச்சியை, அவள்மேனிசாய்ந்து நின்னை வெறுத்து அழாநிற்க அது கண்டும் பொருந்தாதே கைவிடுகின்றவனே! இலங்குகின்ற நீரையுடைய சேர்ப்பனே! நீ மிகக்கொடியைகாண். எ - று. 16 | (2) 2இன்மணிச் (3) சிலம்பிற் (4)சின்மொழி யைம்பாற் பின்னொடு 3கெழீஇய தடவர வல்கு னுண்வரி வாட வாராது விடுவாய் (5) தண்ணந் துறைவ தகாஅய் காணீ |
எ - து: இனிதாகிய உள்ளிடுமணியையுடைத்தாகிய சிலம்பினையுடைய சிலவாகிய மொழியினையுடையாளுடைய மயிரைப் பின்னிமுடிக்கின்ற இளமைப்பருவத்தே வந்து பொருந்தின உறவின்பெருமை இடையறாது வாராநிற்க, அவளல்குலின் நுண்ணிய வரி வாடும்படி அவள்பால் வாராமல் அவளைக் கைவிடுகின்றவனே! தண்ணந்துறைவனே! நீ இனித் தகுதிப்பாடுண்டாகாய் காண். எ - று. எனவாங்கு, அசை. 21 | அனையளென் றளிமதி பெரும நின்னின் றிறைவரை நில்லா வளைய 4ளிவட்கினிப் பிறையேர் சுடர்நுதற் 5பசலை மறையச் செல்லுநீ மணந்தனை விடினே. |
எ - து: பெருமா! அவளை யான் கூறிய அத்தன்மையையுடைய ளென்று உட்கொண்டு அளிப்பாய்; அளித்துவரைந்து தோள்மணந்தனையாய்
1. தழை, இன்னதென்பதும் அதனை இளையமகளி ருடுப்பரென்பதும் இந்நூற்பக்கம் 631 : 1 - ஆம் குறிப்பால் அறியலாகும். 2. தாழிசையில்லாத இடைநிலைப் பாட்டுக்கு “இன்மணிச்.........தகாய் காணீ” என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 132. பேர். சூ. 137. நச். 3. “ஆய்சிலம் பெழுந்தார்ப்ப வஞ்சில வியலுநின், பின்னுலிட் டிருளிய வைம்பால்கண்டு” கலி. 59 : 7 - 8. 4. இந்நூற்பக்கம் 159 : 1 - ஆம் குறிப்புப் பார்க்க. 5. விரிக்கும்வழி விரித்தலுக்கு, “தண்ணந் துறைவன்” என்பது மேற்கோள்; தொல். எச்ச. சூ. 403. சேனா. (பிரதிபேதம்) 1எழிச்சி, 2இன்மொழிச்சிலம்பின், இன்னொலிச் சிலம்பினின், இன்னரிச்சிலம்பின், 3தழீஇயதட, 4அவட்கினி, 5பயலை.
|