பக்கம் எண் :

782கலித்தொகை

விடின் நின்னையின்றி 1இறையினெல்லைநில்லாமற் கழன்ற வளையினையுடைய இவட்கு இனிப் பிறையையொக்குந்திருநுதலிற் றோன்றியபசலை ஒருகாலமும் வாராமல் மறையும்படியாகப் போமென வரைவுகடாயினாள். எ - று.

இதனால், தலைவற்குப் புணர்ச்சியுவகை 2பிறந்தது.

இது “பரத்தை மறுத்தல்வேண்டியும்” என்னும் (1) சூத்திரத்தாற் கை கோளிரண்டற்கும் பொதுவாகப் பொருள் கூறவும் பெறும்.

இது தாழிசையல்லா இடைநிலைப் பாட்டுப்பெற்றுப் புல்லாது விடுவாயெனக் குறைந்துவருதலின் யாப்பின்வேறுபட்டகொச்சகம். (8)

(126)

பொன்மலை சுடர்சேரப் புலம்பியவிடனோக்கித்
தன்மலைந் துலகேத்தத் தகைமதி யேர்தரச்
செக்கர்கொள் பொழுதினா னொலிநீவி யினநாரை
முக்கோல்கொ ளந்தணர் முதுமொழி நினைவார்போ
லெக்கர்மே லிறைகொள்ளு மிலங்குநீர்த்தண்சேர்ப்ப;

6

அணிச்சிறை யினக்குரு கொலிக்குங்கானின்றிண்டேர்
மணிக்குர லெனவிவண் மதிக்குமன் மதித்தாங்கே
யுள்ளான்ற வொலியவா யிருப்பக்கண் டவைகானற்
புள்ளென வுணர்ந்துபிற் புலம்புகொண் டினையுமே;

10

நீர்நீவிக் கஞன்றபூக் கமழுங்கானின்மார்பிற்
றார்நாற்ற மெனவிவண் மதிக்குமன் மதித்தாங்கே
யலர்பதத் தசைவளி வந்தொல்கக் கழிப்பூத்த
மலரென வுணர்ந்துபின் மம்மர்கொண் டினையுமே;

14

நீணகர் நிறையாற்றா ணினையுநள்வதிந்தக்காற்
றோண்மேலா யெனநின்னை மதிக்குமன்மதித்தாங்கே
ஞனவெனப் புல்லுங்காற் காணாளாய்க் கண்டது
கனவென வுணர்ந்துபிற் கையற்றுக் கலங்குமே;

எனவாங்கு;


1. தொல். கற். சூ. 17. இச்சூத்திரத்தினுரையிலும் இவர் இச்செய்யுளை இச்செய்திக்கே மேற்கோள்காட்டி, இதனைக் கைகோ ளிரண்டிற்குங் கொள்கவென்பர்.

(பிரதிபேதம்)1இனி இறையினெல்லை, 2பிறந்தது. இது தாழிசை.........கொச்சகம், இது பரத்தை மறுத்தலைவேண்டியும்.