பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்783

19பலநினைந் தினையும் பைத னெஞ்சி
னலமர னோயு ளுழக்குமென் றோழி
மதிமருள் வாண்முகம் விளங்கப்
புதுநல மேர்தரப் பூண்கநின் றேரே.

இது தோழி தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவுகடாயது.

இதன் பொருள்.

பொன்மலை (1) சுடர்சேரப் புலம்பிய விடனோக்கித்
தன்மலைந் துலகேத்தத் 1தகைமதி யேர்தரச்
செக்கர்கொள் பொழுதினா னொலிநீவியின நாரை
மூக்கோல்கொ ளந்தணர் முதுமொழி நினைவார்போ
லெக்கர்மே லிறைகொள்ளு (2) மிலங்குநீர்த் தண்சேர்ப்ப

எ - து: (3) பொன்னையுடைய அத்தகிரியிலே ஞாயிறு சென்றுசேர, அஞ் ஞாயிறு 2உடனேபட, ஞாயிறின்றி வருந்தின உலகைநோக்கி உலகங்கொண்டாடும்படியாகத் தகைமையினையுடைய மதி எழாநிற்க, செக்கர்வானத்தைக் கொண்ட அந்திக்காலத்தின்கண்ணே, (4) முக்கோலைக் கையிலே கொண்ட அந்தணர் முதியமொழியை நினைக்கின்றவர்களைப்போலே, இனமான நாரைகள் ஆரவாரத்தைக் கைவிட்டு இடுமணன்மேலே இறுத்தலைச் செய்யும் இலங்குகின்ற நீரையுடைய சேர்ப்பனே! எ - று.

(5) அந்தணர், காஷாயம் போர்த்த குழாங்கள். முதுமொழி - பிரணவம். பெரியநாரைசிறகுசிவந்திருத்தலானும்மூக்குத் 3தரையிலேசென்று 4குத்துதலானும் அதனை முக்கோலை ஊன்றியிருந்தஅந்தணரோடு 5ஒப்புரைத்தார்.

(6) நாரை பகற்பொழுதெல்லாம் பல்லுயிர்க்கு வருத்தஞ்செய்து இரை கவர்ந்து அந்திக்காலத்து ஓர் ஆரவாரமின்றித் தீங்குசெய்யாதாரைப் போலே


1. “தினக ரன்கரந் திகழ்க மண்டலம், பனிகொள் செக்கர்தம் படமதாகவே, யினிய வந்தனைக் கெறியும் வேலைசேர், புனித ரொத்ததப் புன்கண் மாலையே” வில்லி. சூதுபோர். 142.

2. “இலங்குநீர்ச் சேர்ப்ப” கலி : 125 : 15.

3. “அத்தமென்னும், பொன்னஞ் சிலம்பு கதிரோன் மறைதலும்” இறை. சூ. 18. மேற்கோள்.

4. இந்நூற்பக்கம் 58 : 2 - ஆம் குறிப்புப் பார்க்க.

5. “சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய்” ஐந் - எழு. 68.

6. “கூர்வாய்ப் பறைதபு பெருங்கிழ நாரை, வஞ்சனை தூங்கி யாரலுண்ணு, நீங்காப் பழன்ப் பெருநகர்க் கூடல்” கல். 39 : 2 - 4.

(பிரதிபேதம்) 1ததைமதி, 2உடனேபட்டு, 3தறையிலே, 4குத்துதலானுமுக்கோலை, 5ஒப்புத்தார்.