குவிந்திருக்குஞ் சேர்ப்பன் என்றதனால், நின்னாட்டின் மகளிர் பிரிந்திருந்தார் உயிர்போதற்கு வேண்டுந் தீங்குகளைப் பகற்பொழுதெல்லாங் கூறி அந்திக் காலத்து ஆரவாரத்தைத் தவிர்ந்து நல்ல மகளிரைப் போலே ஒடுங்கி உறைகின்றார் என உள்ளுறையுவமங்கூறியவாறு உணர்க. 6 | அணிச்சிறை யினக் (1) குரு கொலிங்குங்கா னின்றிண்டேர் மணிக்குர லெனவிவண் மதிக்குமன் மதித்தாங்கே யுள்ளான்ற வொலியவா யிருப்பக்கண் (2) டவைகானற் புள்ளென வுணர்ந்துபிற் புலம்புகொண் டினையுமே |
எ - து : அழகினையுடைத்தாகிய சிறகினையுடைய குருகுகள் இராக் காலத்து ஒருகால் ஒலிக்குமிடத்து நின்னுடைய திண்ணிய தேரின்மணியினோசையென்று இவள் மிகவும் துணியாநிற்கும்; துணிந்த அப்பொழுதே அப்பறவைகள் உள்ளடங்கிய ஒலியையுடையவாய் ஆரவாரியாதிருக்க, அதனைத் தன் (3) மனத்தாலே தேர்மணியொலியல்லவென்று கண்டு, பின்னர் அவ்வொலியைக் கானலிடத்துப் பறவைகளொலியென்று உணர்ந்து, பின்பு தனிமைகொண்டு வருந்தாநிற்கும். எ - று. 10 | நீர்நீவிக் கஞன்றபூக் கமழுங்கா னின்மார்பிற் றார்நாற்ற மெனவிவண் மதிக்குமன் மதித்தாங்கே யலர்பதத் தசைவளி வந்தொல்கக் கழிப்பூத்த மலரென வுணர்ந்துபின் மம்மர்கொண் டினையுமே |
எ - து: நீரைக் கைவிட்டு மேலாய் நெருங்கின பூ அலர்ந்து நாறுமிடத்து நின்மார்பிற் கிடந்த மாலையினது நாற்றமென்று இவள் மிகவுந் துணியாநிற்கும்; துணிந்த அப்பொழுதே அப்பூக்கள் அலருஞ் செவ்வி
1. இந்நூற்பக்கம் 763 : 5 - ஆம் குறிப்புப் பார்க்க. 2. (அ) ‘அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமா பூண்ட, மணியரவ மென்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும், புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னொளியிழா, யுள்ளுருகு நெஞ்சினே னாய்’ ஐந் - ஐம். 50. (ஆ) ”இடுமணலெக்க ரகன்கானற்சேர்ப்பன், கடுமாமணியரவமென்று கொடுங்குழாய், புள்ளரவங் கேட்டுக் கலுழ்ந்தாள் சிறுகுடிய, ருள்ளரவ நாணுவ ரென்று” ஐந் - எழு. 59. 3. காணுதலென்பதற்கு விளங்கவறிதலென்று நீலகேசியுரையாசிரியர் பொருள் கூறுதலால், இங்கே அது காதினால் விளங்கவறிதலின்மேல் நின்றதென்றலுமாம். “நம்பி தந்த கீத மேந யந்து காண வோடினார்” (சீவக. 2037.) என்புழி, காணவென்பதற்கு, கேட்கவென்றுபொருள் கூறியிருத்தலும் இங்கே அறிதற்பாலது.
|