பக்கம் எண் :

788கலித்தொகை

(1) புன்னைப்பூவும்தளையவிழ்ந்தபூக்களையுடையனவாகிய (2) தாழம்பூவும் தளையவிழ்ந்த பூக்களையுடையனவாகிய (3) 1செருந்திப்பூவும் வரியினை யுடைய


நாற்கவி 24 - ஆம் சூத்திரத்திலும் இது நெய்தற்கே உரித்தாகக் கூறப் பட்டிருத்தலானும் அறியலாகும். இம்மரம் எக்கரிற்செழித்துவளர்வது; (உ) அது ஐங்குறுநூற்று ஞாழற்பத்தால் அறியலாகும். இதன் அரையும் கொம்பும் கருநிறமுடையன; அவற்றை (ஊ) “ஏனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலும்” (கலி. 26 : 4) என்பதும் (எ) ‘ச்யாமா’ என வடமொழியிலுள்ள பெயரும் (ஏ) “செவ்வீ ஞாழற் கருங்கோட்டிருஞ்சினை” அகம். 240 : 1. என்பதும் வலியுறுத்தும். அவ்வரை பொரிந்திருப்பது; அது (ஐ) ‘பொரியரை ஞாழலும்’ சீவக. 515 என்பதனால், அறியப்படும். நெய்தனிலத்து மகளிர் இதன்குழை கொய்தும் இதனாலாக்கிய தழையுடுத்தும் இதிற்றூக்கிய ஊசலாடியும் இன்புறுவரென்பதுமரபு; அவற்றை (ஒ) “ஞாழன் மலரின் மகளி, ரொண்டழை யயருந் துறைவன்” ஐங். 147. (ஓ) “கொய்குழை யரும்பிய குமரி ஞாழல்” நற். 54 : 9. (ஒள) “கானன் ஞாழற் கவின்பெறு தழையள்” ஐங். 191. (ஃ) “ஞாழ லோங்குசினைத் தொடுத்த, தாழைவீழ் கயிற்றூசல்” அகம். 20 : 5 - 6. என்பவை வலியுறுத்தும். இது செறிந்தபூங் கொத்தினது; (அஅ) “இணர்ததைஞாழல்” பதிற். 30 : 1. என்பதனால் உணர்தற்பாலது. இது பசிய அரும்புள்ளது; (ஆஆ) “பசுநனைஞாழல்” குறுந். 81. என்பதனாற் பெறப்படும். இதன்பூ, பொன்னிறமும் சிறிய உருவமும் நன் மணமும் வண்டினமொய்த்தலுமுடையது; அவற்றை (இஇ) “பொன்னிணர் ஞாழல்” ஐங். 169. (ஈஈ) “ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்” குறுந். 50. (உஉ) “நறுவீ ஞாழல்” நற். 96 : 1. (ஊஊ) “கணங்கொள்வண் டார்த்துலாங் கன்னி நறுஞாழல்” என்பவற்றால் அறிக. இப்பூ பசப்புக்கும் சுணங்குக்கும்உவமையாதல் இந்நூல் 131 : 11 - ஆம் அடிக்குறிப்பிற் காட்டப்படும். ஞாழலென்பது குங்குமம், ஒருவகைக் கொன்றை, கோங்கு, பலினி முதலிய பலமரத்துக்கும் பெயராமாயினும் நெய்தற்கருப்பொருளில் அதுபலினியையேகுறித்து வருமென்ப; பலினி யென்பது வடமொழிச் சிதைவு.

1. புன்னையின் செய்தி. கலி. 136 : 13 - ஆம் அடிக்குறிப்பிற்காணலாகும்.

2. தாழையின் செய்தி கலி. 131 : 10 - ஆம் அடிக்குறிப்பிற் குறிக்கப்பெறும்.

3. (அ) “பாசிலைச், செருந்தி தாய விருங்கழிச் சேர்ப்பன்” (ஆ) “எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ” (இ) “வண்டுபட, விரிந்த செருந்தி வெண்மணன் முடுக்கர்” (ஈ) “செருந்தி, யிருங்கழி தாழு மெறிகடற்

(பிரதிபேதம்)1செருந்திப்பூவும் சூழ்ந்துகிடக்கும் விளங்குகின்ற சேர்ப்பனே, எங்ஙனம் சூழ்ந்துகிடக்குமென்னில் வரியினை.