பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்787

இதுவுமது.

இதன் பொருள்.

தெரியிணர் ஞாழலுந் தேங்கமழ் புன்னையும்
புரியவிழ் பூவின கைதையுஞ் செருந்தியும்
(1) 1வரி (2) ஞிமி (3) றிமிர்ந்தார்ப்ப (4) விறாந்தும்பி யியைபூதச்
செருமிகு (5) நேமியான் றார்போலப் பெருங்கடல்
வரிமணல் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப

எ - து: போரின்கண் மிகுகின்ற சக்கரத்தையுடைய திருமால் திருத்தோளிற் சேர்ந்த மாலைபோலே பெரிதாகிய கடற்கரையில் அறலையுடைய மணலிடத்தே விளங்குகின்ற கொத்தினையுடைய (6) ஞாழற்பூவும் தேன்நாறு கின்ற


1. “வரிஞிமிறு” குறிஞ்சி. 111.

2. “நரம்பின் றீங்குரனிறுக்குங்குழல்போ, லிரங்கிசைமிஞிறொடு தும்பிதாதூத” கலி. 33 : 22 - 23.

3. “இமிர்ந்தார்ப்ப” கலி. 131 : 9.

4. “இருந்தும்பி யியைபூத” கலி. 123 : 2.

5. பலமலர்கள் விரவி நீளக் கிடத்தல்பற்றி, ‘நேமியான்றார்போல’ என்றார்; (அ) “பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போற், றிருவில் விலங்கூன்றி” கார். 1. எனவும் (ஆ) “அகலிரு வானத்துக் குறைவிலேய்ப்ப, வரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி, முரட்பூ மலிந்த முது நீர்ப் பொய்கை” பெரும்பாண். 292 - 294. (இ) “எருவை கோப்ப வெழிலணி திருவில், வானி லணித்த வரியூதும் பன்மலராற், கூனி வளைத்த சுனை” பரி. 18 : 48 - 50, எனவும் வருபவற்றைநோக்குக.

6. ஞாழல் - நெய்தனிலத்துக்கு உரித்தாகக் கூறப்படுவதொரு பூமரம்; (அ) அது “ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற், கொழுநிழன் ஞாழன் முதிரிணர்கொண்டு, கழுமமுடித்துக் கண்கூடு கூழை” (கலி. 56 : 1 - 3) என்பதன் விசேடவுரையில் ‘ஞாழன் முடித்தாளென நெய்தற்றலைவிபோலவும், ஊர்க்கா னிவந்த பொதும்பரென்றதனான் மருதத்துக்கண்டான் போலவுங்கூறி” என்றும் (ஆ) நெய்தற்கு, ‘மரம், புன்னையும் ஞாழலும் கண்டலும்’ (தொல். அகத். சூ. 18, உரை.) என்றும் இவ்வுரையாசிரியர் எழுதியிருத்தலானும் (இ) நெய்தற்றிணைக் கருப்பொருளுக்கு, “நறுஞாழல் கையினேந்தி என்பதனாற் பூவுங் கூறினார்” (சிலப். பதி. விசேடவுரை) என்று அடியார்க்குநல்லார் எழுதியிருத்தலானும் (ஈ) பரிபாடலும் புறநானூறு மொழிந்த மற்றைத் தொகை நூல்களினும் சீவக. சிலப். மணி முதலிய நூல்களிலும்

(பிரதிபேதம்)1வரிமிஞிறு.