| மதிமருள் வாண்முகம் விளங்கப் புதுநல மேர்தரப் பூண்கநின் றேரே |
1எ - து: பலவற்றையும் நினைத்து வருந்தும் நோயையுடைய நெஞ்சாலே சுழலுதலையுடைய காமநோயிலே அழுந்தும் என் தோழியுடைய மதியென்று மருளும் ஒளியினையுடைய முகம் விளங்கும்படி புதிய நலம் எழுதலைச் செய்ய நின் தேர் குதிரையைப் பூண்பதாகவென வரைவுகடாயினாள். எ - று. | இதனால் தலைவற்குப் புணர்ச்சி யுவகை பிறந்தது. இஃது ஒத்தாழிசைக்கலி. (9) |
(127) | தெரியிணர் ஞாழலுந் தேங்கமழ் புன்னையும் புரியவிழ் பூவின கைதையுஞ் செருந்தியும் வரிஞிமி றிமிர்ந்தார்ப்ப விருந்தும்பி யியைபூதச் செருமிகு நேமியான் றார்போலப் பெருங்கடல் வரிமணல் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப; | 6 | கொடுங்கழி வளைஇய குன்றுபோல் வாலெக்கர் நடுங்குநோய் தீரநின் குறிவாய்த்தா ளென்பதோ கடும்பனி யறலிகு கயலேர்கண் பனிமல்க விடும்பையோ டினைபேங்க விவளைநீ துறந்ததை; | 10 | குறியின்றிப் பன்னாணின் கடுந்திண்டேர் வருபதங்கண் டெறிதிரை யிமிழ்கான லெதிர்கொண்டா ளென்பதோ வறிவஞ ருழந்தேங்கி யாய்நலம் வறிதாகச் செறிவளை தோளூர விவளைநீ துறந்ததை; | 14 | காண்வர வியன்றவிக் கவின்பெறு பனித்துறை யாமத்து வந்துநின் குறிவாய்த்தா ளென்பதோ வேய்நல மிழந்ததோள் விளங்கிழை பொறையாற்றாள் வாணுதல் பசப்பூர விவளைநீ துறந்ததை; | | அதனால்; | 19 | இறைவளை நெகிழ்ந்த வெவ்வநோ யிவடீர வுரவுக்கதிர் தெறுமென வோங்குதிரை விரைபுதன் கரையம லடும்பளித் தாஅங் குரவுநீர்ச் சேர்ப்ப வருளினை யளியே. |
(பிரதிபேதம்) 1எ -து: என்று பலவற்றையும்.
|