பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்791

வேய்நல மிழந்ததோள் விளங்கிழை பொறையாற்றாள்
வாணுதல் பசப்பூர விவளைநீ துறந்ததை

எ - து: மூங்கில் தன்னலனிழத்தற்குக் காரணமான தோள்களிற் கிடந்து விளங்குகின்ற பூண்களை அத்தோள் பொறுத்தலைச் செய்யாமல் மெலிந்து (1) வாணுதல்பசப்புப்பரக்கும்படி இவளைநீதுறந்துநோக்கினார்க்குக் காட்சி வரும்படியாகப் பண்ணினதோர் அழகைத்தான்பெறுகின்ற இப்பனித்துறையிலே 1நடுயாமத்தே நீ வந்து செய்த நின் வரவு உணர்த்திய குறியிலே தப்பாமல் வந்தாளென்பதோ? எ - று.

தன்மெலிவு தோள்பொறாமைக்குக் காரணமாய் நின்றது. ஆற்றாளாயென்னும் முதல்வினை நுதல்பசப்பூரவென்னுஞ் சினைவினையோடு முடிந்தது. (2) 2இவளையென்றது இங்ஙனம் நன்மை செய்தவளையென்றும், நீயென்றது அங்ஙனங் குறைந்துநின்ற நீயென்றும் பொருள் தந்தன.

தாழிசைமூன்றும், பொச்சாப்பென்னுமெய்ப்பாடு 3பயந்தன.

18

அதனால்

இறைவளை நெகிழ்ந்த வெவ்வநோ யிவடீர
வுரவுக்கதிர் தெறுமென வோங்குதிரை விரைபுதன்
கரையம (3) 4லடும்பளித் தாஅங்
(4) குரவுநீர்ச் சேர்ப்ப வருளினை 5யளியே

எ - து: வலியினையுடைத்தாகிய நீரையுடைய சேர்ப்பனே! நினக்குச் செய்ந்நன்றிக்கேடு உண்டாம், ஆகையினாலே அதுதீர வலியினையுடைய ஞாயிறு சுடுமென்று கருதி ஓங்குகின்ற திரை தன் கரையில் நெருங்கின


1. (அ) “நீ துறத்தலிற், பல்லோரறியப் பசந்தன்று நுதலே” (ஆ) “வாணுதல் பசப்பச் செலவயர்ந் தனையே” ஐங். 55, 423. (இ) “நுதலூரும் பசப்பு” (ஈ) “பிறைநுதல் பசப்பூர” கலி. 28 : 15, 99 : 10.

2. “அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ” (கோவையார். 12.) என்பதன் விசேடவுரையில் ‘நின்னையென்புழி உயிரினுஞ்சிறந்த நின்னையென்றும், யானென்புழி இருதலைப் புள்ளினோருயிரேனாகிய யானென்றும், அச்சொற்களால் விளங்கி நின்றன’ என்று பேராசிரியர் எழுதியிருப்பதும் இங்கே அறிதற்பாலது.

3. அடும்பின் செய்தியை, கலி. 144 : 30 -ஆம் அடிக்குறிப்பிற் காண்க.

4. (அ) “உரவுநீ ரழுவத்து” மணி. 7 : 125. (ஆ) “உரவுநீர் ஞாலத்து” பு. வெ. பாடாண். 43. (இ) “உரவுநீர் நிலத்து” கம்ப. பால. ஆற்றுப். 12. உரவு - வலி; உரவுதலெனின், உலவுதலென்றாக்கி, பரத்தலென்றலுமாம்.

(பிரதிபேதம்) 1நடுவியாமத்தே, 2இவளென்றது, 3பயன், 4அடும்பளித்தாங்கு முரவுநீர், 5அளிமே.