அடும்பை விரைந்தளித்தாற்போல இவளுடைய இறையில் வளைகழன்ற வருத்தத்தையுடைய நோய்தீரும்படி அருளினையாய் வரைந்துகொள்ளென வரைவுகடாயினாள். எ - று. (1) வளைகழலுதல் வெளியாக வருத்தத்தைவிளக்குதல்பற்றிச் சுரிதகத்து வளைநெகிழ்தலைக்கூறினாள். | இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது. | | | இஃது ஒத்தாழிசைக்கலி.(10) |
(128) | தோடுறந் தருளா தவர்போ னின்று வாடை தூக்க வணங்கிய தாழை யாடுகோட் டிருந்த வசைநடை நாரை நளியிருங் கங்கு னந்துய ரறியா | 5 | தளியின்று பிணியின்று விளியாது நரலுங் கானலஞ் சேர்ப்பனைக் கண்டாய் போலப் புதுவது கவினினை யென்றி யாயி னனவின் வாரா நயனி லாளனைக் கனவிற் கண்டியான் செய்தது கேளினி; | 10 | அலந்தாங் கமையலெ னென்றானைப் பற்றியென் னலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்ப லோம்பென வளிப்பான் போலவும்; | 14 | முலையிடைத் துயிலு மறந்தீத் தோயென நிலையழி நெஞ்சத்தே னழுவேன் போலவும் வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும்; | 18 | கோதை கோலா விறைஞ்சி நின்ற வூதையஞ் சேர்ப்பனை யலைப்பேன் போலவும் யாதென் பிழைப்பென நடுங்கி யாங்கே பேதையை பெரிதெனத் தெளிப்பான் போலவும்; | | ஆங்கு; |
1. “துறைவன் றுறந்தமை தூற்றாகொன் மூன்கை, யிறையிறவா நின்றவளை” குறள். 1157.
|