பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்793

23கனவினாற் கண்டேன் றோழி காண்டகக்
கனவின் வந்த கானலஞ் சேர்ப்ப
னனவின் வருதலு முண்டென
வனைவரை நின்றதென் னரும்பெற லுயிரே.

இது வரைவிடையாற்றாளாய்ச் செல்கின்ற தலைவியது கவின்கண்டு வினாயதோழிக்கு அவள் தான்கண்ட கனவுநிலையுரைத்தது.

இதன் பொருள்.

தோடுறந் தருளா தவர்போ னின்று
வாடை தூக்க வணங்கிய தாழை
யாடுகோட் டிருந்த வசைநடை நாரை
நளியிருங் கங்கு னந்துய ரறியா
5தளியின்று பிணியின்று விளியாது நரலுங்
கானலஞ் சேர்ப்பனைக் கண்டாய் போலப்
புதுவது கவினினை யென்றி யாயி
னனவின் வாரா நயனி லாளனைக்
கனவிற் கண்டியான் செய்தது கேளினி

எ - து: வாடைக்காற்று அசைக்கையினாலே வளைந்த தாழையின் அசைகின்ற கொம்பிலே இருந்த அசைந்தநடையினையுடைய நாரை நம் தோளைத் துறந்து நமக்கு அருளாதவரைப்போலே நின்று பெருமையையுடைய கங்குலிடத்து நந் துயரை அறியாமல் நம்மேலளித்தலின்றாய்த் (1) தனக்குக் காம நோயாலே வருத்தமின்றாய் மாறாமற் கூப்பிடுங் கானலையுடைய அழகிய சேர்ப்பினையுடையவனைக் கண்டு (2) கூடினாய்போலே புதிதாக ஓர் அழகினை யுடையையானாயென்று


1. “தேற றேங்குழிக், களிப்பவுண் டிளவனங் கன்னி நாரையைத், திளைத்தலின்” (சீவக. 50.) என்பதற்கு, ‘தேறல் மிக்குச் செறிந்த இடத்தே, காமவின்பம் அறிந்த அன்னம் அதனையுண்டு காமவின்ப நுகர்ந்தறியாத நாரையைப் ‘புணர்தலின்’ என இவ்வுரையாசிரியர் எழுதியிருப்பது இங்கே அறிதற்பாலது.

2. (அ) “ஆரிடை யென்னாய்நீ யரவஞ்சாய் வந்தக்கா, னீரற்ற புலமே போற் புல்லென்றாள் வைகறை, கார்பெற்ற புலமேபோற் கவின் பெறும்” (கலி. 38 : 10 - 12) என்பதும் (ஆ) இந்நூற்பக்கம் 212 : 1 - ஆம் குறிப்பும் (இ) “நாடன், புணரிற் புணருமா ரெழிலே பிரியின், மணிமிடை பொன்னின் மாமை சாயவென், னணிநலஞ் சிதைக்குமார் பசலை” என்பதும் இங்கே அறிதற்பாலன.