கூறுகின்றாயாயின் வெளியாக வாராத உறவில்லாதவனைக் கனவிடத்தே கண்டு யான் செய்த காரியத்தை இப்பொழுது கேள். எ - று. 10 | அலந்தாங் (1) கமையலே (2) னென்றானைப் பற்றி (3) யென் னலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் 1கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்ப லோம்பென வளிப்பான் போலவும் |
எ - து: நின்னைப் பிரிந்த இடத்து வருந்தி உயிர்வாழேனென்று கூறினவனைப் பிடித்துக்கொண்டு நீகொண்ட என் நலத்தை இனித் தாராயென்று வளைத்துக்கொள்வேன்போலேயும், அவ்விடத்தே என்னுடையகழிந்த அழகையான் பெறும்படி புல்லிக் கூடி இனி வருந்தாதேகொள்ளென்று கூறி என்னையும் அளிப்பான்போலேயும். எ - று. 14 | (4) முலையிடத் துயிலு மறந்தீத் தோயென நிலையழி நெஞ்சத்தே னழுவேன் போலவும் |
1. “நின்னின்றி யமையலேன் யானென்னு மவனாயின்” கலி. 47: 9. 2. (அ) “தந்தனை சென்மோ.........தண்கடற் சேர்ப்பநீ யுண்டவென்னலக்கே” (ஆ) “என்னலந் தந்து, கொண்டனை சென்மோ” (இ) “தண்ணந் துறைவற்றெடுத்து நந்நலங், கொள்வா மென்றி தோழீ” குறுந். 236; 238; 349; (ஈ) “நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த, பன்மீ ணுணங்கல் கவருந் துறைவனைக், கண்ணினாற் காண வமையுங்கோ லென்றோழி, வண்ணந்தா வென்கந் தொடுத்து” ஐந் - எழு. 66. எனவும் (உ) “இரவுகந்தருளு கனவினிற், பகலிழந்த நிறை பெறமுயன்றுமொழி பதறுமாதர்” கலிங்க. 27. எனவும். வருவன காண்க. 3. கொடுப்பான் பொருளாய்க் கொள்வான்கட் செல்லாதனவற்றை இரத்தற்கண் தாவென் கிளவி வருவதற்கு, “என்னலந்தாராய்” என்பது மேற்கோள்; தொல். எச்ச. சூ. 50. நச். 4. (அ) “நீயுந், தேம்பா யோதி திருநுத னீவிக், கோங்குமுகைத்தன்ன குவிமுலையாகத், தின்றுயி லமர்ந்தனை" அகம். 240 : 9 - 12. (ஆ) “அவர்நம், மேந்துமுலை யாகத்துச் சார்ந்துகண் படுப்பவும்” தொல். கற். சூ. 6. நச். மேற். (இ) “விரிந்த பைந்தலை வெள்ளிவெம் பாப்பணைத் துயின்ற, கருந்துழாய் முகில் கார்நிறக்கட்செவிச்சேக்கை, பொருந்தியாங்கொரு புரிகுழல் புணர்முலைக் கோட்டி, னரந்த மூழ்கிய நறுமலர்ப் பிணையன்மேற்றுயிலும்” பாக. பதினாறாயிரந் திருவிளை. 32. (பிரதிபேதம்) 1கலைந்தாங்கே.
|