18 | (1) கோதை கோலா விறைஞ்சி நின்ற வூதையஞ் சேர்ப்பனை யலைப்பேன் போலவும் யாதென் பிழைப்பென நடுங்கி யாங்கே பேதையை பெரிதெனத் தெளிப்பான் போலவும் |
எ - து: அங்ஙனம் வணங்குகின்ற (2) ஊதைக்காற்றையுடைய சேர்ப்பனை மாலையே கோலாகக்கொண்டு அடிப்பேன் போலேயும், அவ்விடத்தே யான் செய்த தப்பு யாதென்று கூறி நடுங்கி நீ பெரிதும் அறியாமையையுடையை யென்று தெளிவிப்பான் போலேயும். எ - று. இத்தாழிசைகளுள் நெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்தலுமுடையதாகக் கூறி, எதிர்பெய்துகொண்ட தலைவ 1னுருவும் அம்மூன்றுமுடையதாய்ச் செய்யாமரபின செய்தனவாகக் கூறி, (3) 2உயர்திணையாகக் கூறியவாறும் பிறவும் உணர்க. “கனவு 3முரித்தா லவ்விடத் தான்” (3) என்பதனாற் கனவுகொள்க.
மானே போன்றாங், கஞ்சிநின் றழைக்கு மாத்துயர் கண்டு” மணி. 13 : 32 - 33. (ஈ) ‘வலைப்படு மயிலென வருந்தினாரென்க” சீவக. 424. உரை என்பன இங்கே ஒப்புநோக்கற்பாலன. 1. “நல்லார்தங் கோதையா, லலைத்த” (கலி. 67 : 6 - 7.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 2. ஊதைக்காற்று - ஊதையாகிய காற்று. ஊதை - பெருங்காற்று; குளிர் காற்றென்றலுமாம். இது செய்யுள் வழக்கில் “ஊதைகூட் டுண்ணு முகுபனி யாமத்து” என ஊதையென்றேவழங்குமாயினும் உலக வழக்கில் ஊதலென வழங்கும். இதனைக் கடற்காற்றென்பாருமுளர்; இச்சொல் காற்றுக்குப் பொதுப்பெயராயும் வரும். 3. “உறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன், மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ், சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்” என்பது தொல். பொருளி. சூ. 2. 4. தொல். பொருளி. சூ. 3. இச்சூத்திரவுரையிலும் இவர் “அலந்தாங்கு .........பணிவான் போலவும்” என்ற பகுதிகளை மேற்கோள்காட்டி, தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலுமுடையதாகக் கூறியவாறும், ஆங்கு எதிர்பெய்துகொண்ட தலைவனுருவும் உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலுமுடையதாகச் செய்யாமரபின செய்தவாகக் கூறியவாறும் அவை உயர்திணையாகக் கூறியவாறும் பிறவு முணர்க” என்று தெளிவாக எழுதியிருக்கிறார். (பிரதிபேதம்) 1உருவு மூலம் மூன்று, 2உயர்திணையாயவாறும், 3உரித்தாதலவ்விடத்.
|