| வருந்திய செல்ல றீர்த்த திறனறி யொருவன் மருந்தறை கோடலிற் கொடிதே யாழநின் னருந்தியோர் நெஞ்ச மழிந்துக விடினே. |
இது “தன்னுட் கையாறெய்திடு கிளவி” (1) யால்தலைவி ஆற்றாளாயினவாறு தோழி தலைவற்குக் கூறியது. இதன் பொருள். | (2) தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ லெல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய | | (3) நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம்போன் மயங்கிரு டலைவர வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை |
எ - து: பல உலகங்களில் உயிர்களெல்லாம் பழைதாகிய ஊழிக்காலத்தே பிறந்திறந்து தடுமாறித் திரியும்படி அயனாய்நின்று படைத்த முதல்வன் (4) அரனாய் அவ்வுயிரெல்லாந் தன்னிடந்தேவந்துதொகுதலைத் தான்விரும்பும் ஊழி முடிந்த காலத்திலே தன்னிடத்தே மீட்டு
1. இறை. கு. 30. 2. “தொன்முறை யியற்கையின் மதியொ..........மரபிற் றாகப், பசும்பொனுலகமு மண்ணும் பாழ்பட, விசும்பி லூழி யூழூழ் செல்லக்,கருவளர் வானத் திசையிற் றோன்றி,யுருவறி வாரா வொன்ற னூழியு, முந்துவளி கிளர்ந்த வூழூ ழூழியுஞ்,செந்தீச் சுடரிய வூழியும் பனியொடு,தண்பெய றலைஇய வூழியு மவையிற்,றுண்முறை வெள்ள மூழ்கி யார் தருபு,மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிற்கு,முள்ளீ டாகிய விருநிலத்தூழியு,நெய்தலுங் குவளையு மாம்பலுஞ் சங்கமு,மையில் கமலமும் வெள்ளமு நுதலிய, செய்குறி யீட்டம்” பரி 2 : 1 15. 3. (அ) “அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே, கோடியாத்துநாடு பெரிது நந்து, மெல்லியன் கிழவ னாகி..............பிண்ட நச்சின்,............தானு முண்ணா னுலகமுங் கெடுமே” (ஆ) “காவற் சாகா டுகைப்போன் மாணி, னூறின் றாகி யாறினிது படுமே, யுய்த்த றேற்றா னாயின் வைகலும், பகைக்கூ ழள்ளற் பட்டு, மிகைப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே” புறம். 184 : 5 - 11; 185 : 2 - 6. 4. “பல்லுருவம் பெயர்த்துநீ” (கலி. 1 : 5) என்பதும் அதன் உரையின் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.
|