ஒடுக்கிக்கொள்கின்றவனைப் போலே ஞாயிறு பகற்பொழுது வந்துசேர்தற்குக் காரணமான 1தன்னுடைய தெறுகின்ற கிரணங்களைத் தன்னிடத்தே மீட்டுக்கொண்டு மறைகையினாலே (1) நல்ல நீதிநூல் வழியாலே உலகை நெறியிலே நிறுத்தி அவ்வுலகை ஆண்ட அரசன் போயபின்னர் நீதியல்லதனை எறட்டுக் கொண்டிருந்த அறநெறியை உலகத்து நிறுத்தமாட்டாத குறுநில மன்னன்காலம்போலே மயங்கின இருள் உலகிடத்தேவரும்படி பகற்பொழுதிற்கு ஓரெல்லையாகிய, வருத்தம்மிகுதற்குக் காரணமான, மயக்கத்தையுடைய மாலைக்கண்ணே. எ-று. | மடக்கி, மடங்கியென விகாரம். மெல்லியான், படைமுதலியன இன்றி இளைத்தவன். எல்லை, (2) மரணகாலமுமாம். |
| 8 (3) பாய்திரை 2பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கட (4) றூவறத் 3துறந்தனன் றுறைவனென் றவன்றிற நோய்தெற 4வுழப்பார்க ணிமிழ்தியோ வெம்போலக் காதல்செய் தகன்றாரை யுடையையோ நீ |
1. “அறமாவது: உயிர்களுக்கு இதமாவன செய்தலும் சத்தியஞ் சொல்லுதலும் தானதன்மங்கள் செய்தலுமாம்” என்று பதுமனார் கூறுதலால், ‘நல்லற நெறிநிறீஇ’ என்பதற்கு, நல்ல அறங்களைத் தன்னெறியால் உலகில் நிறுவியென்றலுமாம்; “நடையி னின்றுயர் நாயகன்” “என்னுயிரொழுக் கதற்கு வேண்டு முவமையொன் றுரைக்க வேண்டின்” “நெறியி னின்றதன் னாயகன்” கம்ப. பாயிர. 11. நாடவிட்ட. 41. பாசப். 41. எனவருதலும் அறிக. 2. “புல்லென மருண்மாலைப் போழ்தின்று வந்தென்னைக், கொல்லாது போத லரிதா லதனொடியான், செல்லாது நிற்ற லிலேன்” கலி. 145 : 29 -31. 3. (அ) “இடையேவளை சோரவெழுந்துவிழுந், தடலேய்மத னன்சரமஞ்சினையோ, வுடலோய்வுற நாளு முறங்கலையால், கடலேயுரை நீயுமொர் கன்னிகொலாம்” கம்ப. கடிமணப். 11. என்றும் (ஆ) “போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி, நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவா, யரவகற்று மென்போல வார்கலியே மாதை, யிரவகற்றி வந்தாய்கொ லின்று” நள. கலிநீங்கு. 21. என்று ஒருவாறு இதனை யொத்தும் வருவன காண்க. 4. (அ) “தூவறத் துறந்தாரை” கலி. 118 : 9. (ஆ) “தூவறத் துறத்தனன்றென” மணி. 25 : 92. என்பவைகளும் இந்நூற்பக்கம் 7475 -ஆம் குறிப்பில் இதற்கு பொருந்துபவையும் ஒப்புநோக்கற்பாலன. (பிரதிபேதம்) 1தனதுடைய, 2பாட்டோவா, 3துறந்ததண்டுறைவன், 4உமிழ்ப்பார்கண்.
|