பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்801

எ - து: பரக்கின்ற திரை ஒலித்தல் மாறாத பரத்தலை யுடைத்தாகிய நீரையுடைய பனிக்கடலே! துறைவன் எமக்கு வலியில்லையாம்படி துறந்தானென்று அவன் கூற்றாலே உண்டான காமநோய்சுட அதன்கண் அழுந்துவாரிடத்தே நின்று வருத்தவேண்டி முழங்குகின்றாயோ? அன்றியே முன்னர்க் காதல்செய்து பின்பு நீங்கினாரை எம்மைப்போலே நீயும் உடையையாய் வருந்துகின்றாயோ? எ - று.

12(1) மன்றிரும் பெண்ணை மடல்சே 1ரன்றி
னன்றறை கொன்றன ரவரெனக் கலங்கிய
வென்றுய ரறிந்தனை நரறியோ (2) வெம்போல
வின்றுணைப் பிரிந்தாரை யுடையையோ நீ

எ - து: மன்றிலே நின்ற கரியதாகிய பனையின்மடலைச் சேர்ந்திருக்கும் (3) அன்றிலே! நந்தலைவர் தாஞ்செய்த நன்றுகளையான் இருந்துசொல்லுதலைக் கெடுத்துவிட்டாரென்று கலங்கிய (1) என் வருத்தத்தை


1. (அ) “மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத், துணைபுன ரன்றில்” நற். 303 : 4 - 5.(ஆ) “மன்றலம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை, யன்றிலும் பையென நரலும்” குறுந். 177.

2. திணையும் பாலும் விளங்கநில்லாத சொற்களுள் நீஎன்பது குறிப்பான் அஃறிணையுணர நிற்றற்கு,(அ) “எம்போல...........நீ” என்பது (தொல். பெயர். சூ. 37. ‘இன்னபெயரே’ தெய். உரையிலும்)(ஆ) “இன்றுணை...............நீ” என்பது (தொல். பெயர். சூ. 39. நச். உரையிலும்) மேற்கோள்.

3. அன்றிலென்பது நெய்தனிலத்துக்கு உரித்தாகக் கூறப்படுவதொரு பறவை; கழிமீன் முதலியவற்றையுண்டு பனைமரத்திற் சிறுகோலாற் கூடுகட்டிக்கொண்டு வதிவது; செந்தலையையும் வளைந்ததும் செந்நிறத்ததுமாகிய வாயையும் கரிய காலையுமுடையதென்று கூறப்படுகிறது; துணையின்மேன் மிக்க காதலையும் அதனைப் பிரியாத தன்மையையும் பிரியின் துயிலாது நடுங்கி வருந்திக் கதறுந் தன்மையையுமுடையது; நள்ளிரவின் அகவுவது; பிரிந்திருப்பவரைத் தன்குரலால் வருத்துவது; இவை,(அ) “தெண்ணீ ரிருங்கழி வேண்டுமிரைமாந்திப், பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணரன்றில்”(ஆ) “நெருப்பி னன்ன செந்தலை யன்றி, லிறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு.............கட்சியிற் பிரிந்தோர் கையற நரலு நள்ளென்யாமத்து”(இ) “மனைசேர் பெண்ணை மடிவா யன்றி, றுணையொன்று பிரியினுந் துஞ்சாகா ணென”(ஈ) “பராரைப் பெண்ணைச் சேக்குங்கூர்வா, யொருதனி யன்றி லுயவுக்குரல் கடைஇய, வுள்ளே கனலு

(பிரதிபேதம்) 1அன்றிலினன்றறை.