அறிந்தனையாய் மிகவும் வருத்தவேண்டி ஆரவாரிக்கின்றாயோ? அன்றியே முன்பு இனிய துணையாய்ப் பின்புபிரிந்தாரை எம்மைப்போலே நீயும் உடையையாய் வருந்துகின்றாயோ? எ - று. நன்றறைகொன்றனர் என்றதனால் தீங்கே செய்தமை கூறினாள். இனி மிகவும் மறைந்துநின்ற களவை வெளிப்படுத்தினாரும் என்பாரும் உளர். 16 | பனியிருள் சூழ்தரப் பைதலஞ் (2) சிறுகுழ லினி 1வரி னுயருமற் பழியெனக் கலங்கிய தனியவ ரிடும்பைகண் (3) டினைதியோ வெம்போல வினியசெய் தகன்றாரை யுடையையோ நீ |
எ - து: வருத்தத்தினையுடைய அழகினையுடைய சிறியதாகிய குழலே! இக்காலத்தே வருவாராயின், தாஞ்செய்த பழி மிகவும்போமென்று கருதிப் பனியோடு கூடிய இருள்சூழ்ந்து வருகையினாலே கலங்கின தனித்தவருடைய
முள்ள மெல்லெனக், கனையெரி பிறப்ப வூது, நினையா மாக்க டீங்குழல் கேட்டே”(உ) “செவ்வாய் வன்றி றுணையிழப்ப”(ஊ) “முழவுமுதலரைய தடவுநிலைப் பெண்ணைக், கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக், கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல், வயவுப்பெடை யகவும் பானாள்”(எ) “கனைத்ததங் காதலிற் கனவிற் கண்டிறந், தினைந்த போன் றிடையிடை நோக்கியின்குரல், புனைந்தகம் புணர்பெடை புல்லி மெல்லவே, யனந்தருண் முரன்றன வன்றிற் சேவலே”(ஏ) “புணர்பிரியா வன்றிலும்போ, னித்தலு நம்மைப் பிரியல மென்றுரைத்த, பொற்றொடியும்”(ஐ) “ஒன்றில் காலை யன்றில் போலப், புலம்புகொண் டுறையும் புன்கண் வாழ்க்கை”(ஒ) “துணைபிரிந்தயரு மன்றிற் சேவலிற் றுளங்குகின்றான்”(ஓ) “பெண்ணைமேற் பின்னுமவ் வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலுக், குன்னி யுடலுருகி நையாதார்” என்பவற்றால் அறியப்படும்.பெரும்பாலும் இவ்வியல்பினதாக மகன்றிலென்று ஒருநீர்வாழ்பறவைகூறப்படுகிறது. இதுவும் அதுவும் ஒன்றென்னும் கூறுவர். அன்றிலென்பது வடமொழியில், ‘க்ரௌஞ்சம்’ எனவழங்குமென்ப. 1. “தன்றுணை யில்லாள் வருந்தினாள் கொல்லென, வின்றுணை யன்றி லிரவி னகவாவே” (கலி. 131 : 27 - 28) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 2. (அ) “குழலினு மினைகுவள் பெரிதே” ஐங். 306.(ஆ) “கோவலர் தீங்குழ லினைய வரோவென், பூவெழி லுண்கண் புலம்புகொண் (பிரதிபேதம்) 1வரிலுயரும்.
|