வருத்தத்தைக்கண்டு நீயும் வருந்துகின்றாயோ? அன்றியே முன்பு இனியனவற்றைச் செய்து பின்பு நீங்கினாரை எம்மைப்போலே நீயும் உடையையாய் வருந்துகின்றாயோ? எ - று. (1) உயர்தல், ‘’நோன்புயர்தல்’’ போல நீக்கத்தின்கணின்றது. (2) கடலும் அன்றிலும் குழலும் உற்ற பிணியைத் தம்பிணிக்கு வருந்தின வாகச்சேர்த்தி உயர்திணையாக்கி உவமவாயிற்படுத்தவாறு காண்க. இஃது ‘’அவாவ ருறுபிணி தமபோற் சேர்த்தியது’’ (3) 1எனவாங்கு எ - து: என்றுசொல்லி. எ - று. ஆங்கு, அசை. 21 | அழிந்தய லறிந்த வெவ்வ மேற்படப் பெரும்பே துறுதல் களைமதி பெரும வருந்திய செல்ல 2றீர்த்த திறனறி யொருவன் (3) மருந்தறை 3கோடலிற் கொடிதே யாழநின் 4னருந்தியோர் நெஞ்ச 5மழிந்துக விடினே |
6எ - து: நெஞ்சழிந்து, அயலிலுள்ளார் அறிந்தவருத்தம் மேலிட்டுவருகையினாலே பெரியதாகிய பித்தேறுதலைப் பெரும! வரைந்துகொண்டு போக்குவாய்; அங்ஙனம் போக்குங்கால் நின்னை நுகர்ந்தோருடைய நெஞ்சம் அழிந்து கெட்டுப்போம்படியாக அவரைக் கைவிடுவையாயின், அது வருந்தியவருத்தத்தைப் போக்கும் மருந்தின்றிறத்தை அறிந்த ஒருவன் அம்மருந்தை அறியேன் என்று வஞ்சித்து அம்மருந்தின்
டினையும்” கலி, 130 : 15 - 16.(இ) “குழலினை வதுபோ லழுதனள் பெரிதே” புறம். 143 : 15. 1. ‘’தானுயர்ந்த தவத்தினான்’’ கம்ப. கும்ப. 119. 2. ‘’அன்றிற் கமைக்காழிக்கு........................அயர்ந்தாள்’’ 3. தொல். பொருளி. சூ. 2.(அ) இச்சூத்திரப்பகுதியினுரையிலும் இவர் இச்செய்திக்கு இத்தாழிசை மூன்றையும் மேற்கோளாகக் காட்டி, இக்குறிப்பையும் எழுதியிருக்கிறார். (ஆ) தலைமகள் அவரவருறுபிணி தமபோற் சேர்த்திக் கூறியதற்கு, ‘’பாய்திரை.......................காதல்செய் தகன்றாரை யுடையையோ நீ’’ என்னும் பகுதிமட்டும் (தொல். பொருளி. சூ. 2; இளம். இ - வி. சூ. 570..) மேற்கோள். 4. ‘’இயைவது கரத்தலிற் கொடுமை யில்லை’’ முதுமொழி. 55. (பிரதிபேதம்) 1ஆங்கசை அழிந்தயல், 2தீர்திறனெறி, 3கோறவிற், 4அருந்தோர்செஞ்ச, அருந்தொடுநெஞ்சு, 5அகிந்துக, இழந்துக, 6எ - து : என்றுசொல்லி நெஞ்சழிந்து.
|