| எனவாங்கு; | 18 | படுசுடர் மாலையொடு பைதனோ யுழப்பானைக் குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை விடுவழி விடுவழிச் சென்றாங்கவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே. |
இது பிரிவிடையாற்றாத தலைவியது ஆற்றாமை தலைவன் வந்துசார்தலின் நீங்கினமைகண்டு வாயில்கள் தம்முள்ளே கூறியது. இதன் பொருள். | நயனும் வாய்மையு நன்னர் நடுவு மிவனிற் றோன்றிய விவையென விரங்கப் புரைதவ நாடிப் (1) பொய்தபுத் தினிதாண்ட 1வரைசனோ டுடன்மாய்ந்த நல்லூழிச் செல்வம்போ னிரைகதிர்க் கனலி பாடொடு பகல்செலக் (2) கல்லாது முதிர்ந்தவன் (3) கண்ணில்லா நெஞ்சம்போற் புல்லிருள் 2பரத்தரூஉம் புலம்புகொண் மருண்மாலை |
எ - து: (4) இவனாலேவிளங்கின கலந்தஉறவும் உண்மைகூ றலும் நன்மையையுடைய நடுவுநிலைமையுமாகிய இவை, இனி விளக்கமின்றிப் போயின வென்று தனக்குப்பின்பு உலகத்தார் இரங்கும்படியாக அவற்றிற்கு உயர்ச்சி மிகும்படி ஆராய்ந்து (1) பொய்யைக்கெடுத்து நன்றாக ஆண்ட
வந்தன’ என்பர்; இ - வி. நூலாரும் அவ்வாறே கூறுவர்; இ - வி. சூ. 394. 1. “பொய்யறியா வாய்மொழியாற், புகழ்நிறைந்த நன்மாந்தரொடு, நல்லூழி யடிப்படர, .................வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக” மது. 19 - 23. 2. “கல்லா தவருளம் புல்லிய குழலும்” 3. (அ) “கண்ணில்புன் மாக்கள்” நாலடி. 44.(ஆ) “கண்ணிழந்து மாயக் கவறாடி” நள. சுயம்வர. 10.(இ) “கண்ணுடைய ரென்பவர் கற்றோர்” குறள். 393.(ஈ) “கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணு மாகும்” சீவக. 1595.(உ) “கண்ணிரண்டே யாவர்க்குங் கற்றோர்க்கு மூன்றுவழி” நீதிவெண்பா. 4. (அ) “கலையின தகலமுங் காட்சிக் கின்பமுஞ், சிலையின தகலமும் வீணைச்செல்வமு, மலையினி னகலிய மார்ப னல்லதிவ், வுலகினி லிலையென வொருவ னாயினான்” சீவக, 411.(ஆ) “ஆற்றலு நிறையுங் (பிரதிபேதம்) 1அரசனோடு, 2பரத்தரும்.
|