பக்கம் எண் :

806கலித்தொகை

அரசனோடே சேரக்கெட்ட நல்ல ஊழால் உண்டாகிய செல்வம்போலே நிரைத்த கதிரையுடைய ஞாயிறு படுதலோடே பகற்காலமும்போகப் பின்பு வருத்தங் கோடற்குக் காரணமாகிய மாட்சியையுடைய மாலைக்காலம் ஒன்றையுங் கல்லாமல் மூத்தவனுடைய ஞானக்கண்ணில்லாத நெஞ்சுபோலே புற்கென்ற இருள் உலகிலே பரத்தலைத் தாராநிற்கும். எ - று,

ஊழ், ஊழி எனத் திரிந்தது.

“நயனு 1நண்பு நாணுநன் குடைமையும், பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்” (2) என்றாரகாலின,் நயன் பண்பன்மைஉணர்க. இரங்கப் புரை தவநாடியென்க. அச்செல்வம் அரசனோடு போனாற்போலப் பகற்காலமும் ஞாயிற்றோடே போயிற்றென்றுணர்க.

8 (3) இம்மாலை
ஐய ரவிரழ லெடுப்ப வரோவென்
கையறு நெஞ்சங் கனன்றுதீ மடுக்கும்

கல்வி யமைதியு மறிவு மென்னும், வேற்றுமை யிவனோ டில்லை” கம்ப. அனுமப். 19.(இ) “மறமும் வாகு வலியும் வல்வின் முதலெப்படையின்றிறமுந் தேசும் வாழ்வுஞ் சீருங் கேள்விச் செல்வு,நிறமு முண்மை யறிவு நெறியும் புகழுந் திகழ்பேரறமும் பொன்று நின்னோ டையா வந்தோ வந்தோ”(ஈ) “வில்லாய் நீவெம் போர்முனை வெல்லும் விறலாய்நீ, சொல்லாய் நீதொல் வேதிய ருட்குந் தொழிலாய்நீ,வல்லார்வல்ல கலைகளனைத்தும் வல்லானே,யெல்லாமின்றே பொன்றின வுன்னோ டெய்தாயே” வில்லி. பத்தாம்போர். 40. பதினைந்தாம். 33.

1. (அ) “பொய்சேணீங்கிய வாய்நட் பினையே” மது. 198.(ஆ) “தேற்றாய் பெரும பொய்யோ” புறம். 59 : 4.(இ) “புகழ்வாய்மை வழீஇய சொல்லும் ............இலன் கொற்றவேலான்” நாரதசரிதை(ஈ) “மன்னனுக், கைய மின்றி யறங்கட வாதருண், மெய்யி னின்றபின் வேள்வியும் வேண்டுமோ”(உ) “பொய்ச்சொற் கேளா வாய்மொழி மன்னன்” கம்ப. மந்தரை 17. கைகேயி. 31.(ஊ) “சத்தியம் பிறழ்வது தரியேம்”அரிச். மயான. 128.

2. நற். 160 : 1 - 2.

3. (அ) “அந்தி யந்தண ரெதிர்கொள வயர்ந்து, செந்தீச் செவ்வழறொடங்க வந்ததை............மாலை யென்மனார்” கலி. 119 " 12 - 16;(ஆ) “அந்தி யந்தணர் செந்தீப் பேண” மணி. 5 : 133.

(பிரதிபேதம்) 1நன்றும்.