எ - து: இம்மாலைக்கண்ணே, இருடிகள் விளங்குகின்ற அழலை (1) 1ஆவுதி பண்ணிஎழுப்ப, என்செயலறுநெஞ்சம் தானுங்கொதித்து எனக்குங் (2) காமத்தீயைக் கொளுத்தும். எ - று. 11 | (3) இம்மாலை இருங்கழி மாமலர் கூம்ப வரோவென் னரும்படர் நெஞ்ச மழிவொடு கூம்பும் |
எ - து: இம்மாலைக் கண்ணே, 2கரிய கழிகளிற் பெருமையையுடைய மலர்கள் குவிய, என்னெஞ்சம் அவனை 3உள்ளுதலால் அழிதலோடே தான் நினைவின்றிக் குவியும். எ - று, 14 | (4) இம்மாலை கோவலர் தீங் (5) குழ 4லினைய வரோவென (6) பூவெழி லுண்கண் புலம்புகொண் டினையும் |
எ - து: இம்மாலைக்கண்ணே, கோவலருடைய இனியதாகிய குழலாலே நெஞ்சுவருந்த, 5எனது பூவினதழகையுடைய உண்கண் தனிமையைக் கொண்டு வருந்தும். எ - று. இஃது, இன்பத்தைவெறுத்தல், அரோ, அசை.
1. வடமொழியின் முப்பத்துமூன்றாம் மெய்யாகிய ஹகாரம் சேர்ந்த மொழிகளைத் தமிழில்வழங்கும்போது அம்மெய் மொழிமுதலில்வரின் அதனைக்கெடுத்தும் இடையேவரின் ககரமாகவாவது யகரமாகவாவது திரித்தும் வழங்குவதன்றி வகரமாகவும் திரித்து வழங்குவரென்பதை,(அ) “ஆவுதி மண்ணி” மது. 494.(ஆ) “ஆவுதி நறும்புகை” பட். 55. சிலப். 10 : 144.(இ) “ஆவுதி யருத்தியும்” பட். 200.(ஈ) “பெரும்பெய ராவுதி” பதிற். 21 : 7.(உ) “ஆவுதி பொங்க” புறம். 15 : 19. என இச்சொல் பயின்று வருதலானும் வைதேஹி யென்பது.(ஊ) வைதேவியென வழங்கப்படுதலானும் அறிக. 2. “மாலை மலருமிந்நோய்” குறள். 1227. 3. "இல்லவ ரொழுக்கம்போ லிருங்கழி மலர்கூம்பச், செல்லுமென்னுயிர்ப்புறத் திறுத்தந்த மருண்மாலை” கலி. 148 : 6 - 7. 4. “ஆயர் மணிமாலை யூதுங் குழல்” (கலி. 101 : 34 - 35) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 5. இந்நூற்பக்கம் 802 : 2 - ஆம் குறிப்புப் பார்க்க. 6. “பூவெழி லிழந்தகண் புலம்புகொண் டமையாது, பாயனோய் மிகும்” கலி. 28 : 18 - 19. (பிரதிபேதம்) 1ஆகுதி, 2கரியதாகிய கழி, 3உள்ளி அழித, 4இணைப்ப, 5என்னுடைய பூ.
|