எனவாங்கு 1எ - து: எனச் சொல்லி. எ - று. ஆங்கு அசை. 18 | (1) படுசுடர் மாலையொடு பைதனோ யுழப்பாளைக் (2) குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் லியன்றானை (3) விடுவழி விடுவழிச் சென்றாங்கவர் தொடுவழித் தொடுவழி 2நீங்கின்றாற் பசப்பே |
3எ - து: (4)படுகின்ற சுடரையுடைய மாலையாலே வருத்தத்தையுடைய காமநோயிலே அழுந்துகின்றவளைக் குடிமக்களைப் பாதுகாத்துப் பின்னர்த் தன்னைப் பாதுகாக்கும் பாண்டியனுடைய அகற்சியையுடைய (5) படை விடவிடப் பகைவர் நீங்கினாற்போலப் பிரிந்தவர்வந்து தீண்டத்தீண்டப் பசப்பு நீங்கிற்று; ஈ திருந்தவாறு என்னென (6) வாயில்கள் தம்முட்டம்முட் கூறினார். எ - று.
1. “படுசுடர்..........பசப்பே” என்பது, வழியீற்று வினையெச்சத்திற்கு மேற்கோள்; தொல். வினை. சூ. 31. கல். இவ்வினையெச்சத்திற்கு, கடையிரண்டடிமேற்கோள்; தொல். வினை. சூ. 32. நச். இ - வி, சூ. 246 நன். வினை. சூ. 24 இரா. இது இறப்புப்பற்றிவந்ததென்பர். 2. (அ) “குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல், வடுவன்று வேந்தன்றொழில்” (குறள். 549.) என்புழி, ‘குடிபுறங் காத்தோம்பல்’ என்பதற்கு, குடிகளைப் பிறர் நலியாமற்காத்துத் தானும் நலியாது பேணுதலென்று பொருள்கூறுவர். பரி.(ஆ) “குடிபுறங் காத்து” மணி. 23 : 11. பெருங் (5) 8 : 20.(இ) "கிளர்வேந்தன் றன்னாடு, வாட்டானன் றென்றல் வனப்பு” சிறுபஞ்ச. 9. 3. (அ) “தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழிவிடுவுழிப் பரத்தலானே” குறுந். 399.(ஆ) “கொழுநனைச் சேர்ந்தோர், பசலை யென்னவே யுடைந்தது பாதக னிரதம்” விநாயக மகோற்கடர். 583. 4. படுகின்ற சுடர் - அத்தமிக்கும் சூரியன்; மாலைக்காலத்துக்கு விளக்கேற்றல் கூறப்படுதலால், 'உண்டாகின்ற விளக்கு' எனினுமாம். 5. படைவிடல் - சேனைகள்போய்த் தங்குதல்; படைக்கலங்களைச் செலுத்தலென்பாரு முளர். 6. வாயில்களென்பது சொல்லால் அஃறிணையாயினும் பொருளால் உயர்திணையாதலின், கூறினாரென உயர்திணையால் முடித்தார். (பிரதிபேதம்) 1என்றதில் ஆங்கசை, 2நீங்கின்று பசப்பே, நீங்கிற்றாற்பசப்பே, 3எ - து: எனச் சொல்லிப்படுகின்ற.
|