பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்809

“வாயிலுசாவே தம்முளுரிய” (1) என்பதுவிதி. உழப்பாளைத்தொடுவழி யென்க. விடுவிழி தொடுவழி என்பன செயவெனெச்சக் குறிப்புச்சொல்லாகிய வழி என்னும் வினையெச்சம்.

இதனால், வாயில்கட்குப் பெருமிதமென்னும் மெய்ப்பாடு பிறந்தது.
(2) இஃது இடையிடை சொற்சீரடி வந்தகொச்சகம்.(13)

131 பெருங்கடற் றெய்வநீர் நோக்கித் தெளித்தென்
றிருந்திழை மென்றோண் மணந்தவன் செய்த
வருந்துயர் நீக்குவேன் போன்மற் பொருந்துபு
பூக்கவின் கொண்ட புகழ்சா லெழிலுண்க
5 ணோக்குங்கா னோக்கி னணங்காக்குஞ் சாயலாய் தாக்கி
யினமீ னிகன்மாற வென்ற சினமீ
னெறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த
நெய்த னெடுநார்ப் பிணித்தியாத்துக் கையுளர்வின்
யாழிசை கொண்ட வினவண் டிமிர்ந்தார்ப்பத்
தாழா துறைக்குந் தடமலர்த் தண்டாழை
வீழுச றூங்கப் பெறின்;
12 மாழை, மடமான் பிணையியல் வென்றாய் நின்னூசல்
கடைஇயா னிகுப்பநீ டுங்காய் தடமென்றோ
ணீத்தான் றிறங்கள் பகர்ந்து
15 நாணினகொ றோழி நாணினகொ றோழி
யிரவெலா நற்றோழி நாணின வென்பவை
வாணிலா வேய்க்கும் வயங்கொளி யெக்கர்மே
லானாப் பரிய வலவ னளைபுகூஉங்
கானற் கமழ்ஞாழல் வீயேய்ப்பத் தோழியென்
மேனி சிதைத்தான் றுறை;

1. தொல். செய். சூ. 200.

2. (அ) இச்செய்யுள் இடையிடையே சொற்சீரடி பல விரவி யாப்பின் வேறுபடவந்த கொச்சகமென்பதும் இவர் கருத்துப்போலும்; (ஆ) “நயனும் வாய்மையு நன்னர்நடுவுமென, அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியதுபோலுங் கொச்சகம்வருங்கால் ஒத்தாழிசையும் வண்ணகமும்போலத் தனிச்சொற் பெற்றும் பெறாதும் வரும்” என்பது பேராசிரியருரையிற் காணப்படுவது. தொல். செய். சூ. 155.