பக்கம் எண் :

810கலித்தொகை

21  மாரிவீ ழிருங்கூந்தன் மதைஇயநோக் கெழி லுண்கட்
டாழ்நீர முத்தின் றகையேய்க்கு முறுவலாய்
தேயாநோய் செய்தான் றிறங்கிளந்து நாம்பாடுஞ்
சேயுய ரூசற்சீர் நீயொன்று பாடித்தை;
25 பார்த்துற்றனதோழி பார்த்துற் றனதோழி
யிரவெலா நற்றோழிபார்த்துற்றன வென்பவை
தன்றுணை யில்லாள் வருந்தினாள் கொல்லென
வின்றுணை யன்றி லிரவி னகவாவே
யன்றுதா னீர்த்த கரும்பணி வாடவென்
மென்றோண் ஞெகிழ்த்தான் றுறை;
31 கரைகவர்கொடுங்கழிக் கண்கவர் புள்ளினந்
திரையுறப் பொன்றிய புலவுமீ னல்லதை
யிரையுயிர் செகுத்துண்ணாத் துறைவனை யாம்பாடு
மசைவர லூசற்சீ ரழித்தொன்று பாடித்தை;
35 அருளினகொ றோழி யருளினகொ றோழி
யிரவெலாந் தோழி யருளின வென்பவை
கணங்கொ ளிடுமணற் காவி வருந்தப்
பிணங்கிரு மோட்ட திரைவந் தளிக்கு
மணங்கம ழைம்பாலா ரூடலை யாங்கே
வணங்கி யுணர்ப்பான் றுறை;
எனநாம்;
42 பாடமறைநின்று கேட்டன னீடிய
வானீர்க் கிடக்கை வயங்குநீர்ச் சேர்ப்பனை
யானென வுணர்ந்து நீநனி மருளத்
தேனிமிர் புன்னை பொருந்தித்
தானூக் கினனவ் வூசலை வந்தே.

இது வரைவுநீட ஆற்றாளாயதலைவியைத் தோழி அவன் முன் அருமை செய்து அயர்த்தகாலத்து 1அவன் வரைவினையானறிந்து ஊசலாட நின்னைக் கொண்டுபோய் ஆடுகின்ற காலத்து யான் இயற்பழிக்க நீ இயற்பட மொழிவது கேட்டுவந்து ஊசலை ஊக்கியவன் இக்காலத்து வருந்தவிடாது வருத்தமறிந்து வரைந்து கொள்வனென ஆற்றுவித்தது.


(பிரதிபேதம்)1அவன் வரவினை.