இதன் பொருள் | பெருங்கடற் றெய்வநீர் நோக்கித் தெளித்தென் றிருந்திழை மென்றோண் மணந்தவன் செய்த வருநதுயர் நீக்குவேன் போன்மற் 1பொருந்துபு (1) பூக்கவின் கொண்ட (2) புகழ்சாலெழிலுண்க | 5 | (3) ணோககுங்கா னோக்கி னணங்2காக்குஞ் சாயலாய் தாக்கி யினமீ னிகன்மாற வென்ற சினமீ (4)னெறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த (5)நெய்த னெடுநார்ப் 3பிணித்தியாத்துக் கையுளர்வின் (6)யாழிசை கொண்ட வினவண் டிமிர்ந்தார்ப்பத் தாழா துறைக்குந் தடமலர்த் தண்(7)டாழை வீழூச றூங்கப் பெறின்; |
1. ‘‘பூவுயிர்த் தன்ன புகழ்சா லெழிலுண்கண்’’ கலி. 142: 11. 2. ‘‘தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று’’ புகழ்தல். 3. ‘‘நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண்டன்ன துடைத்து’’ குறள். 1082. 4 (அ) ‘‘எறிசுறாக் குப்பை யினங்கலக்கத்தாக்கு, மெறிதிரை’’ ஐந்-எழு. 65 (ஆ) ‘‘எறிசுறா நீள்கட லோத முலாவ’’ திணைமொழி. 43. (இ) இந்நூற்பக்கம் 772: 3-ஆம் குறிப்புப் பார்க்க. 5. ‘‘குவளையைத், தன்னாரா லியாத்து விடல்’’ (பழ. 365.) எனவும் ‘‘குமிழின், புறழ்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின், வில்யாழிசைக்கும் விரலெறிகுறிஞ்சிப், பல்காற்பறவை கிளைசெத்தோர்க்கும்’’ (பெரும்பாண். 180 - 183.) எனவும் வருவன இங்கே நோக்கற்பாலன. 6. ‘‘யாழ்போல வண்டார்க்கும்’’ கலி. 32: 9 என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 7. (அ) ‘‘தாழை வீழ்க் கயிற்றூச றூங்கி’’ அகம். 20 : 6. (ஆ) ‘‘கானலொருசிறை, மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த விழ்பூங்கோதையோ டவிரிழை பொங்க வெக்கர்த் தாழை, நீர்த்துறைத் தாழ்ந்த, நெடுவீ ழூசன் முடிபிணி யேறித், தொடுவேன், முற்றத்துத் தோழியோ, டாடா’’ பெருங். (1) 40 : 109 - 114 எனப் பிற நூல்களுள்ளும் வருதல் காண்க. இது விழுதுடைமையால் (இ) ‘வீழ்த்தாழை’ என்றும் தாழையென்னும்பெயரைத் திரிசொல்லாகவுடைய தென்னை வீழின்மையால் (ஈ) ‘வீழி றாழை’ என்றும் கூறப்படும். இங்கே கூறப்படும் வீழ்த்தாழை (பிரதிபேதம்)1பொருந்து பூக்கவின், 2ஆகுஞ் சாயல், 3பிணித்தியார்த்து, பிணியாத்து.
|