பக்கம் எண் :

812கலித்தொகை

எ - து: நோக்குங்காலத்து அப்பார்வையாலே பிறர்க்கு 1வருத்தமுண்டாக்கும், தன்னில்இணையொத்துப் பூவினதழகைத் தன்னிடத்தேகொண்ட


(உ) புறக்காழுடையதாதலாற் புல்வகையுள் ஒன்றாக எண்ணத்தக்கது. இது கடலலை மோதுமிடத்துள்ள எக்கரிற் செழித்துவளர்வது, வளைந்தவடிவும் சருச்சரையான அரையு முடையது. தோல்திரைந்தாற்போன்ற திரையரையுடையதென்றும் கூறுவர். இதன் இலை மிக்க நீளமுடையதாயும் இருவிளிம்பிலும் புறத்திடையிலும் கூர்மையும் வளைவுமுள்ள சிறு முட்களையுடையதாயும் ஒவ்வொரு கிளையின் நுனியிலும் அடர்ந்திருக்கும். அதனால் இதற்குப் பேயை உவமையாகக் கூறுவர். இவ்விலையால், குடை செய்யப்படுகின்றது. இதன் முள்ளுக்குச் சுறாக்கோடும் வாளரமும் பாம்பின் எயிறு (பல்லு)ம் உவமையாக்கப் பட்டுள்ளன. இம்முள் எயிறுபோலுதலால் எயிறெனவும் படும். புறமடலிலும் இவ்வகை முள்ளுண்டு. இதில் ஆணென்றும் பெண்ணென்றும் உலக வழக்கில் இருபிரிவுள்ளது. ஆண்டாழை காய்க்கும். அது அக்காயை யடுத்துள்ள காய்மடலெனப்படும் புறமடல் சிலவற்றையேயுடையது; வேறுபூஇல்லாதது, பெண்டாழை காயாது. மேற்கூறிய இலையினடுவேயிருந்து பலமடல்களையுடைய அரும்பையீன்று பூக்கும். இப்பூவில் வெண்ணிறமுடையது வெண்டாழையென்றும் பொன்னிறமுடையது செந்தாழையென்றும் வழங்கப்படும். இவற்றுள் செய்யுளிற் பெண்டாழையும் வெண்டாழையுமே பயின்று வரும். ஆண்டாழையும் செந்தாழையும் அருகிவழங்கும். வெண்டாழைமுகிழுக்கு யானைத்தந்தமும் நகிலும் அதன்பூவுக்கு அன்னம் குருகு கொக்குமுதலியபறவைகளும் சங்கமும் உவமையாக உரைக்கப் படுகின்றன. செந்தாழம்பூவுக்குப் பொன் உவமையாக ஓதப்படுகிறது. இஃது உலகவழக்கில் மோத்தையென்று மொழியப்படும். (ஊ) இதன்முகிழ் கருவிலிருக்கும்போதே வண்டுகள் அதனை அறிந்து அதிற் செல்லுமென்பார். குருகுகள் இதனைத் தம்பார்ப்பென்றும் படையென்றும் மயங்கிப் புல்லுமென்பது கவிமரபு. இப்பூ, பறவைபோலத் தோன்றுதலால் இதனிழலைக் கயல் கெண்டை இறாமுதலிய மீன்கள் தம்மையுண்ணும் புட்களென்று அஞ்சி ஒளிக்குமென்றும் உரைப்பதுண்டு. இது காலையில் மலர்வதாகக் கூறுவர். இது மின்னல் மின்னுங்காலத்தும் பெருங் காற்று வீசுங்காலத்தும் மிகப் பூப்பது. இப்பூ. ஓலைப்பூவென்றும் கூறப்படும். இப்பூவின்மடல்களுக் கிடையே பூந்தாதையுடைய சோறெனப்படும் இழுதுபோன்ற உறுப்பு ஒன்றுண்டு. (எ) இப்பூவில் இத்தாதே உண்டென்றும் தேன் இன்றென்றும் சிலர் கூறுவர். இப்பூ, புலவு

(பிரதிபேதம்)1வருத்தமுண்டாக்குங் கண்ணியையுடைய சாயலாயென்க. சாயல் ஈண்டுத் தலைவிக்கு ஓர் பெயர்த்தன்மையாய் நின்றது. தன்னில்.